தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக கொடிகட்டி பறப்பவர் தான் தமன். சமீபத்தில் இசையமைத்த பேபி ஜான், கேம் சேஞ்சர் மற்றும் தாகு மகாராஜ் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதனைத் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி பிசியாக நடித்து வருகின்றார். இப்படியான நிலையில் சமீபத்தில் நிகில் விஜயேந்தரா சிம்ஹாவின் பாட்காஸ்டில் திருமணம் பற்றியும் பெண்களை சுதந்திரம் பற்றியும் பேசிய கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழ் பேசிய இந்த கருத்துக்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
அதில், தற்போது திருமணம் செய்து கொள்வதெல்லாம் நல்லதல்ல. யாரையும் இப்போது திருமணம் செய்து கொள்ளுமாறு நான் பரிந்துரைக்க மாட்டேன். ஏனென்றால் இப்போதெல்லாம் உறவுகளை தக்க வைத்துக் கொள்வது எப்போதும் இல்லாத அளவுக்கு கடினமாக மாறி உள்ளது. இப்போது யாரும் திருமணம் செய்து கொள்வதை நான் விரும்பவில்லை. பெண்களும் வாழ்க்கையில் சுதந்திரமாக இருக்க விரும்புவதால் இது கடினமாகிவிட்டது.
பெண்கள் தற்போது யாருக்கும் கீழ் இருக்க விரும்புவதில்லை. எனவே நாம் ஒரு அப்பாவி பெண் சமூகத்தை இழந்து விட்டோம் என்று நினைக்கின்றேன். மக்கள் இன்ஸ்டாகிராமில் பரிபூரணத்தை பார்ப்பதற்கு மிகவும் பழகி விட்டார்கள். அதனை அடைய முயற்சி செய்ய விரும்புவதில்லை. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு எல்லாமே மாறிவிட்டது. இன்ஸ்டாகிராமில் அழகான விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொள்கின்றோம். ஆனால் அதன் பின்னணியில் இருக்கின்ற போராட்டங்கள் குறித்து நாம் சொல்வதே இல்லை.
இப்போது நான் திருமணங்களை பரிந்துரைக்கவில்லை. திருமணத்தின் தர நிலைகளை புரிந்து கொள்வது மிகவும் கடினமாகிவிட்டது. எந்த பக்கம் திரும்பினாலும் மக்கள் விவாகரத்து செய்வதை நான் காண்கின்றேன். அது தற்போது பொதுவானதாகிவிட்டது. உறவுகளை யாரும் சரி செய்ய விரும்புவதில்லை. பெண்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவதால் தான் சமூகத்தில் விவாகரத்து சாதாரணமாகிவிட்டது என்று தமிழ் கருத்து தெரிவித்துள்ள நிலையில் இவருடைய இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.