#image_title
பிரபல இசையமைப்பாளரான சிற்பி தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் வேலை பார்த்துள்ளார். இவர் ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார். கடந்த 1993-ஆம் ஆண்டு கோகுலம் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மூலமாக சிற்பி இசையமைப்பாளராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். கடந்த 1997-ஆம் ஆண்டு இசையமைப்பாளர் சிற்பிக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். சிற்பியின் மகன் நந்தன் ராம் கடந்த 2017-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பள்ளி பருவத்திலே என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதில் சூர்யாவும் சிநேகாவும் இணைந்து நடித்த உன்னை நினைத்து என்ற திரைப்படம் 2002-ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் இசையமைப்பதற்காக சிற்பிக்கு தமிழக அரசின் சிறந்த இசை அமைப்பாளர் விருது வழங்கப்பட்டது.
கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், கேப்டன், சின்ன மேடம், நாட்டாமை, அவதார புருஷன், செல்வா, பெரிய இடத்து மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் உன்னை நினைத்து படத்தில் பொம்பளைங்க காதலை தான் நம்பி விடாதே என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது. சமீபத்தில் சிற்பி சித்ரா லட்சுமணனுடன் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, உன்னை நினைத்து படத்தில் இடம்பெற்ற பொம்பளைங்க காதலை தான் நம்பி விடாதே என்ற பாடலை கம்போசிங் செய்தோம்.
அப்போது எம்.எஸ் விஸ்வநாதன் இசை அமைத்த வளர்ந்த கதை மறந்து விட்டால் கேளடா கண்ணா என்ற பாடலை கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் வரும் ராகத்தை அப்படியே பயன்படுத்தி பொம்பளைங்க காதலை தான் நம்பி விடாதே என்ற பாடலுக்கு டியூன் போட்டோம். பாடல் சூப்பர் ஹிட் ஆனது. முதலில் பெண்களை தாழ்த்தி பேசுவது போல பாடல் அமைந்திருக்கும். கடைசியில் சூர்யா வந்து அதனை மேனேஜ் செய்யும்படி வரிகள் இருக்கும். நினைத்தபடி பாடலும் சூப்பர் ஹிட் ஆனது. பழைய பாடலில் இருந்து தான் இந்த பாடலை கம்போசிங் செய்தோம் என ஓப்பனாக பேசியுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை குறித்து ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்,…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மாநில அரசியல் களம் புதுச்சேரியை நோக்கி…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத 'தொங்கு சட்டப்பேரவை' (Hung Assembly) அமைந்திருக்கும் சூழலில், 108 இடங்களைப்…
தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, பரஸ்பரம் எதிரெதிர் துருவங்களாக விளங்கும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத்…
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மாநில அரசியல் களம் தற்போது…