தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் தான் தனுஷ். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் இயக்குனர் என பன்முக திறன் கொண்டவராக விளங்கி வருகின்றார். மேலும் தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை சென்று கலக்கிக் கொண்டிருக்கிறார். அதே சமயம் பாரதி திரைப்படம் மூலம் நேரடி தெலுங்கு திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்த திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருந்த நிலையில் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார். இப்படி தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியாக தனுஷ் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது குபேரா மற்றும் இட்லி கடை போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் இளையராஜாவின் பயோபிக்கிலும் தனுஷ் தான் நடிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கும் படத்திலும் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த ராயல் திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதிலும் குறிப்பாக அப்படத்தில் இடம்பெற்று இருந்த வாட்டர் பாக்கெட் பாடல் ஒட்டு மொத்த ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்தப் பாடலுக்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்த நிலையில் கானா காதர் லிரிக்ஸ் எழுத சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் பாடியிருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ராயன் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ராயன் படத்தில் வாட்டர் பாக்கெட் பாடல் பாடுவதற்காக என்னை அழைத்தபோது, உங்களுக்கு எப்படி பண்ணனும் அது மாதிரி பண்ணி தரேன் காசு கூட வேண்டாம் என்று சொல்லிட்டேன். அவர் கூப்பிட்ட ஒரே காரணத்துக்காக போய் அந்தப் பாட்டை பாடி கொடுத்தேன் என்று அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.