தனது இசையால் பலரையும் கட்டி போட்டவன் தான் இசைஞானி இளையராஜா. இவருடைய இசைக்கி மயங்காதவர்கள் யாருமே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். அன்னக்கிளி திரைப்படம் மூலமாக அறிமுகமான இளையராஜா இன்னும் இசையின் மூலமாக ராஜாங்கம் நடந்ததி கொண்டிருக்கிறார். இவரின் முதல் படத்திலிருந்து இவருடைய பாடல்கள் சரித்திரமாக தொடங்கி விட்டது. அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற பாடலின் ஹம்மிங் மனதிற்குள் புகுந்து மனதை கரைத்து விடும். இப்படி அடுத்தடுத்த படத்திற்கு இசையமைத்து அனைவரையும் கட்டுப்போட்ட இளையராஜா இதுவரை 1500 க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
ஏராளமான மேடை நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றியுள்ள இளையராஜா பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை உருவாக்கியுள்ளார். இப்படியான நிலையில் வருகின்ற மார்ச் எட்டாம் தேதி லண்டனில் முதல் சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றுகிறார். இதனால் அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் சிம்போனி என்றால் என்ன? சிம்போனி இசைப்பது இசை உலகில் கௌரவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து பதிவில் பார்க்கலாம்.
சிம்பொனி என்பது மேற்கத்திய செவ்வியல் இசை ஆகும். மரபில் பல்வேறு இசை கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஒரு ஒத்திசை தொகுப்பு. இந்த இசை தொகுப்பு பல்வேறு பகுதிகளை பெரும்பாலும் நான்கு பகுதிகளை கொண்டதாக இருக்கும். இவை movement என்று குறிப்பிடப்படுகிறது. அதில் ஒரு பகுதி சொனாடா என்ற வடிவத்தில் இருக்கும். சிம்போனிகளுக்கு என மிக தெளிவான விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளது. ஒரு சிம்போனி 30 முதல் 100 இசைக் கலைஞர்களை கொண்ட இசையமைக்க கூடிய ஒரு நிகழ்வாகும்.
இதில் வயலின், புல்லாங்குழல் மற்றும் ட்ரம்பெட் போன்ற காற்றால் இசைக்கப்படும் கருவிகள், தாள இசைக் கருவிகள் ஆகியவை இடம் பெறும். ஐரோப்பியாவின் இசை வரலாற்றில் செவ்வியல் விசையின் காலகட்டமாக கருதப்படும் 1740 முதல் 1820 காலகட்டத்தில் சிம்போனிகள் உருவாக தொடங்கியதாக பிரித்தானிய கலைக்களஞ்சியம் கூறுகிறது. ஜோசஃப் ஹைடன், மொசார்ட், பீத்தோவன் ஆகியோர் மிகச் சிறந்த சிம்ஃபொனி தொகுப்புகளை உருவாக்கியவர்களாகக் கருதப்படுகிறார்கள். இசைஞானி இளையராஜா Vailant என்ற பெயரில் ஒரு சிம்பொனியை உருவாக்கியுள்ளார். இதை தான் உருவாக்கிய முதல் சிம்போனி என இளையராஜா குறிப்பிடுகிறார். இந்த சிம்போனி லண்டனில் Royal Philharmonic orchestra மூலமாக இசைக்கப்பட்டு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்ட நிலையில் இதனை வெறும் 34 நாட்களில் இளையராஜா எழுதி முடித்ததாக தெரிவித்துள்ளார்.