புகழ்பெற்ற சமையல் கலைஞராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். முதல்வர் முதல் பிரதமர் வரை பலருக்கும் தன் கையால் சமைத்துக் கொடுத்து பாராட்டுக்களை பெற்றவர். பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் இல்ல திருவிழாவில் கூட சமீபத்தில் கேட்டரிங் சர்வீஸ் செய்து இவர் அசத்தி இருந்தார். இதனைத் தவிர இவருக்கு சொந்தமாக அமெரிக்காவில் ஹோட்டலும் உள்ளது. அங்குள்ள மக்களுக்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளை வழங்கி வருகின்றார். சமையல் கலையில் மட்டுமல்ல இவருக்கு சினிமா மீதும் அதிக ஆர்வம் உள்ளது. சினிமா மீது கொண்ட ஆசையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படம் மூலம் நடிகராகவும் இவர் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகின்றார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் சமீபத்தில் இவர் நடுவராக பங்கேற்று இருந்தார். இப்படி பல புகழுக்குரிய இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. பொதுவாகவே சினிமாவிற்கு வந்து பிரபலமாகி விட்டால் அவர்களைப் பற்றி கிசுகிசுக்கள் வருவது வழக்கம்தான். அதன்படி மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். இவரும் அவருடைய ஆடை வடிவமைப்பாளருமான ஜாய் கிரிசல்டாவும் காதலித்து வருவதாக கூறி நெட்டிசன்கள் சில இன்ஸ்டா பதிவுகளை வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய ஜாய் மாதம்பட்டி ரங்கராஜின் பர்சனல் ஸ்டைலிஷ் ஆக கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஹார்டின் எமோஜிகளோடு அவர் பதிவிட்டது மட்டுமல்லாமல் அண்மையில் காதலர் தினத்தை அவருடன் தான் கொண்டாடியதாகவும் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த பதிவுகளை கண்டு குழம்பிப் போய் உள்ள நெட்டிசன்கள் இவரை தான் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள உள்ளாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இப்படியான நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவருடைய மனைவி ஸ்ருதி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து “நான் தான் மாதம்பட்டி ரங்கராஜனின் மனைவி”என்று அவர் பதிலடி கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாதம்பட்டி ரங்கராஜன், பொதுவெளியில் அதாவது குறிப்பாக சமூக ஊடகங்களில் வெளிவரக்கூடிய தகவல்கள் குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். என் வாழ்க்கை தொடர்பான எல்லா கேள்விகளுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது.
சில விஷயங்கள் என் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பானது. அது பற்றி எல்லாம் நான் ஏன் பேச வேண்டும். அதே நேரம் அவசியம் பேசியே ஆக வேண்டும் என்ற ஒரு காலகட்டம் வந்தால் அப்போது நான் விளக்கமாக அதை பொதுவெளியில் சொல்வேன். என் குடும்பத்துல எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. ரொம்ப பர்சனல் ஆன விஷயங்கள் பற்றி இப்ப எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மாதம் பட்டி ரங்கராஜனின் மனைவி ஷூட்டி இன்ஸ்டாகிராமில் போட்ட ஒரு புகைப்படத்திற்கு கீழே கமெண்டில் உங்கள் இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டதா என்று ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு ஸ்ருதி ரங்கராஜன் மாதம்பட்டி ரங்கராஜன் கொடுத்த விளக்கத்தை டேக் செய்துள்ளார். இதிலிருந்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவது உறுதியாகியுள்ளது