தமிழ் சினிமாவில் 80களில் இறுதியில் இசைஞானி இளையராஜாவின் ஆதிக்கம் தான் நிறைந்திருந்தது. அந்த சூழலில் தான் இசை புயல் ஏ ஆர் ரகுமான் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதே காலகட்டத்தில் கானா பாடல்களின் தந்தையாக விளங்கும் தேவாவும் அறிமுகமானார். இந்த இரண்டு பெரிய ஜாம்பவான்களுக்கு மத்தியில் தானும் ஒரு சிறந்த இசையமைப்பாளராக மாற வேண்டும் என்று எண்ணி அதுவரை பிளாட்பார்ம் பாடல்கள் என்று அழைக்கப்பட்டு வந்த பாடல்களுக்கு கானா பாடல் என்று பெயரிட்டு தன்னுடைய திரைப்படங்களில் அதை பெரிய அளவில் பயன்படுத்தியது மட்டுமல்லாமல் அந்த விஷயத்தில் மிகப்பெரிய சாதனை படைத்தவராக தேவா மாறினார்.
கடந்த 1989 ஆம் ஆண்டு தமிழில் பிரபல நடிகர் ராமராஜன் நடிப்பில் வெளியான மனசுக்கேத்த மகாராசா திரைப்படம் மூலம் தான் தேவா இசை அமைப்பாளராக அறிமுகமானார். தமிழில் தொடர்ச்சியாக நல்ல பல படங்களை கொடுத்து வந்த தேவாவிற்கு கடந்த 1990 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படம் தான் முதன் முதலில் தமிழக அரசு வழங்கும் மாநில விருதை பெற்று தந்தது. 1991 ஆம் ஆண்டில் மட்டும் தேவா இசையில் 10க்கும் மேற்பட்ட படங்கள் வெளியான நிலையில் இவர் தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் என்ற புகழைப் பெற்றார்.
அதனைப் போலவே கானா பாடல்கள் மட்டுமே தேவாவுக்கு மிகப்பெரிய ஹிட்ஆகி வந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படம் ஒன்றுக்கு அவர் அமைத்த அனைத்து பாடல்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இந்நிலையில் தேவா சமீபத்தில் அளித்த பேட்டியில், எனக்கு அடுத்தடுத்து படங்கள் வாய்ப்பு கிடைத்தது. ஆனா பாட்டு மட்டும் தான் எடுப்பாங்க படம் ரிலீஸ் ஆகாது. 13 படம் கமிட் ஆகி எல்லா படத்திலும் பண்ணி முடிச்சு ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல. இசையமைப்பாளர் தேவா என்ற பெயர் மட்டும் பத்திரிக்கையில் வந்தது. ஆனா படம் மட்டும் வரல.
இதனால தேவா என்ற பெயர் ராசி இல்லை என்று நினைத்து ஜோதிடம் பார்த்து என் பெயரை மாற்றினேன். அந்த சமயத்துல நிறைய பேர் தங்களோட பெயரை மாற்றிக்கொண்டு இருந்தார்கள். நீங்களும் மாத்தி பாருங்க என்று என்கிட்ட சொன்னதுனால நாடோடி சித்தன் என்று பெயரை மாற்றினேன். பெயரை மாற்றியதும் முதன்முதலாக திருப்பதி ஏழுமலையான் குடை கச்சேரி ஒன்று நடைபெற்றது. அதில் நாடோடி சித்தன் இசை கச்சேரி என்று பெயர் பலகை வைக்கப்பட்டிருந்த நிலையில் நானும் அங்கு பாடினேன். ஆனால் கல்லுக்கூட அசையல என்று தனது பெயரை ஒரு காலத்தில் மாற்றியது குறித்து தேவா சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…