46 வயது இசையமைப்பாளரால் சீரழிந்த நடிகர் அஜித்தின் தம்பி வாழ்க்கை.. அந்த 3 பேர் யார் என்பதில் நீடிக்குது மர்மம்..?

By admin on மார்கழி 31, 2023

Spread the love

நடிகர் கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இயக்கியவர் சிவா. சிறுத்தை சிவா என தமிழ் சினிமாவில் அழைக்கப்படும் இவர் வீரம், வேதாளம், அண்ணாத்த உள்ளிட்ட வெற்றிப்படங்களை தந்தவர். இப்போது சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படம் விரைவில் வெளிவர இருக்கிறது. சிறுத்தை சிவாவின் சொந்த தம்பி பாலா. இவர் அன்பு என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். வீரம் படத்தில், அஜீத்குமாரின் 4 தம்பிகளில் ஒருவராக நடித்திருப்பார். தமிழை காட்டிலும் மலையாளத்தில் நிறைய படங்களில் பாலா நடித்திருக்கிறார்.

   

நடிகர் பாலா, கேரளாவைச் சேர்ந்த பின்னணி பாடகி அம்ரிதா சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு அவந்திகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில், 2015ம் ஆண்டு முதல் மானசீகமாக பிரிந்துவாழ்ந்த அவர், 2019ம் ஆண்டில் முறைப்படி கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். மைனர் பெண் என்பதால், அவந்திகா, அமிர்தா சுரேஷ் வளர்ப்பில் இருந்து வருகிறார்.

   

 

இந்நிலையில் கடந்த 19ம் தேதி, தனது பிறந்த நாளன்று நடிகர் பாலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரது மனைவியை விவகாரத்து செய்தது குறித்து பேசிய போது, என் மகள் அவந்திகாவின் எதிர்காலம் கருதி சில விஷயங்களை நான் பேசுவதை தவிர்க்க நினைக்கிறேன். அந்த காட்சியில் அந்த மூன்று பேரை நான் பார்த்து அதிர்ந்து போய்விட்டேன். அவர்களை நான் சும்மா விட்டிருக்க மாட்டேன். ஆனால், என் மகள், மகனாக பிறக்காமல் போய்விட்டாள்.

அவந்திகா மட்டும் மகனா பிறந்திருந்தால் அந்த மூன்று பேரையும் நான் சும்மா விட்டிருக்க மாட்டேன். என் வாழ்க்கை இப்படியாக, என் மனைவியை விட்டு நான் பிரிய அந்த கோபி சுந்தர்தான் காரணம், என்று பாலா கூறியிருக்கிறார். தமிழ் சினிமா ஹீரோ ஒருவரை, சில மாதங்களுக்கு முன் இதே போல் ஒரு பிரபல இசையமைப்பாளர் குறிப்பிட்டு, அவர் செய்த துரோகத்தை என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி வெளியே சொல்லவில்லை என்று சொன்னது போன்றே இந்த சம்பவமும், நடிகர் பாலா வாழ்வில் நடந்துள்ளது.