“பட்டப்பகலில் நடுங்க வைக்கும் இரட்டை கொலை”… தந்தை – மகனை ஓட ஓட விரட்டி வெட்டிவிட்டு தப்பியோடிய கொலையாளி… போலீஸ் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்…!!!

By Muthu Mani on சித்திரை 19, 2026

Spread the love

டெல்லி சி.ஆர்.பார்க் பகுதியில் தந்தை மற்றும் மகன் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த ராகேஷ் மற்றும் அவரது மகன் கரண் ஆகியோர் தங்களது அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் கரணை சரமாரியாக வெட்டத் தொடங்கியுள்ளார்.

தனது மகனைக் காப்பாற்ற ஓடிவந்த தந்தை ராகேஷையும் அந்த நபர் இரக்கமின்றி கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரள்வதற்குள் அந்த மர்ம நபர் தலைமறைவாகிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்ட போலீசார் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், தந்தை மற்றும் மகன் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

   

இந்த இரட்டைக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், முதற்கட்ட விசாரணையில் சொத்துத் தகராறு காரணமாக இந்தப் பயங்கரம் நடந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். பட்டப்பகலில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கொலையாளியைப் பிடிக்க போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.