சென்னை கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் 2வது தெருவை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணுடன் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளன. இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வரும் நிலையில் அடிக்கடி வெளியூருக்கு செல்வதால் அவ்வபோது மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இதனால் சரண்யா வீட்டிலிருந்து குழந்தைகளை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் சரண்யாவிற்கு பக்கத்து வீட்டில் குடும்பத்துடன் வசிக்கும் திவாகர் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளன.
கடந்த நான்கு ஆண்டுகளாக சரண்யா அவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதனை அக்கம் பக்கத்தினர் மூலமாக அறிந்த மணிகண்டன் தன்னுடைய மனைவியை கண்டித்துள்ளார். இதனால் அடிக்கடி கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் சரண்யா திவாகரிடம் பழகி வந்த நிலையில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தன்னுடைய மனைவியின் கள்ளத்தொடர்பு குறித்து உறவினர்களிடம் கூறியுள்ளார். மேலும் கள்ளக்காதலை கைவிடுமாறு சரண்யாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மணிகண்டன் வழக்கம் போல சரண்யாவிடம் கள்ளக்காதலை கைவிடச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஆத்திரமடைந்த சரண்யா வீட்டிலிருந்த நைலான் கயிற்றை எடுத்து மணிகண்டன் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பிறகு அலறி துடித்து அக்கம் பக்கத்தினரிடம் என் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், அவரை காப்பாற்ற கயிற்றை அறுத்து முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை என்று சரண்யா நாடகமாடியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் மணிகண்டன் கொலை செய்யப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் சரண்யா மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…