புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மல்லாங்குடி கிராமத்தை சேர்ந்த பழனிவேலு (55) மற்றும் மகாலட்சுமி (43) தம்பதியினருக்கு தமிழ்ச்செல்வி (25), சாரதா (20) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இதனிடையே பழனிவேலுவுக்கு கொழுப்பு கட்டிகள் இருந்த நிலையில் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் மகாலட்சுமி அவருடைய மூத்த மகள் தமிழ்ச்செல்வி ஆகியோர் வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் வேலைக்கு செல்வதை அப்புறம் பக்கத்தினர் தவறாக பேசி வந்துள்ளனர். பழனிவேலுவும் வேலைக்கு சென்று வரும் மனைவி மற்றும் மகளை சந்தேகப்பட்டு அடிக்கடி அவதூறாக பேசியுள்ளார்.
இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 52 நாட்களுக்கு முன்பு மகாலட்சுமிக்கும் அவருடைய கணவருக்கும் வழக்கம் போல தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பழனிவேலு தகாத வார்த்தைகளால் பேசியதால் ஆத்திரமடைந்த மகாலட்சுமி தனது மகன்களின் உதவியுடன் பழனிவேலுவை அடித்து கொலை செய்து விட்டு கொலை செய்தது வெளியில் தெரியக்கூடாது என்று அவரது வீட்டின் அருகே உள்ள கழிவறை பக்கத்தில் குழி த்தோண்டி உடலை புதைத்துள்ளனர். பிறகு பழனிவேலுக்கு கொழுப்பு கட்டிகள் இருப்பதால் கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக அனைவரையும் நம்ப வைத்துள்ளனர்.
இந்நிலையில் இரண்டு நாட்களாக பழனிவேலு அவருடைய சகோதரி ஆன காவிரியை தொடர்பு கொள்ளாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்து காவேரி தன்னுடைய சகோதரரை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மகாலட்சுமி தான் அவரது கணவரை அடித்து கொலை செய்து புதைத்து விட்டு நாடகம் ஆடியதும் அதற்கு இரண்டு மகள்களும் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. தற்போது மூன்று பேரையும் கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் புதைத்த இடத்திற்குச் சென்று பழனிவேலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
