கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இருந்தை என்ற கிராமத்தில் மாதா கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்தக் கோவிலுக்கு அதே கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தினமும் அதிகாலை வழிபாட்டிற்காக செல்வது வழக்கம். அப்படி நேற்று முன்தினம் ஜபம் செய்வதற்காக மக்கள் சென்று உள்ளனர். அப்போது இளைஞர் ஒருவர் தேவாலயத்திற்கும் RC பள்ளிக்கும் இடையில் 20 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் கிடந்துள்ளது. யாரோ ஒருவர் போதையில் படுத்திருப்பதாக தேவாலயத்திற்கு சென்ற மக்கள் நினைத்துள்ளனர். பிரார்த்தனை முடிந்து வந்த பிறகும் அந்த நபர் அசையாமல் கிடப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்து அருகில் சென்று பார்த்தனர்.
அப்போது அந்த இளைஞரின் கண் புருவம், கீழ் தாடை மற்றும் தலையில் பலமாக தாக்கி கொலை செய்யப்பட்டு பிணமாக கடப்பதை கண்டு அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். பிறகு கொலை செய்யப்பட்டவர் அதே ஊரை சேர்ந்த ஆண்டனி ஆரோக்கிய ஜோ என்ற இருபது வயது இளைஞர் என்பது தெரிய வந்தது. உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு அந்த வாலிபரின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .
போலீஸ் நடத்திய விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் தேவா என்பவர் மீதும் கொலை செய்யப்பட்டு இறந்து போன ஆண்டனி என்கின்ற ஆரோக்கிய ஜோ மீதும் கடந்த 2024 ஆம் ஆண்டு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேவாவின் தம்பியான லிசன் (20) தனது அண்ணன் தேவாவை போக்சோ வழக்கில் மாட்டிவிட்டது ஆரோக்கிய ஜோ தான் என கடுப்பில் இருந்துள்ளார்.
தன்னுடைய அண்ணனை பாலியல் வழக்கில் சேர்த்து காட்டிக் கொடுத்ததற்காக ஆரோக்கிய ஜோவை தீர்த்து கட்ட வேண்டும் என்று அவர் ஏற்கனவே திட்டம் தீட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து கொலை நடந்ததற்கு முந்தைய நாள் இரவு லிஸ்சன் என்பவர் மதுவாங்கி வைத்துக் கொண்டு ஆரோக்கிய ஜோவை மாதா கோவிலின் அருகே வரவழைத்து அவருக்கு அளவுக்கு அதிகமாக குடிக்க கொடுத்துள்ளார். அவரும் மது போதையை தலைக்கேறி என்ன நடக்கிறது என்பது தெரியாத நிலைக்கு சென்ற நிலையில் அந்த சமயத்தில் லிசன் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் ஓங்கி தலையிலும், முகம் மற்றும் கழுத்து உள்ளிட்ட பகுதிகளிலும் அடித்துள்ளார்.
இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிறகு உடலை அங்கேயே போட்டி விட்டு தப்பி சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அண்ணனை மாட்டி விட்டதற்காக தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
