“நான் டிரைவர் வேலைக்கு போனா, நீ இங்க சந்தோசமா இருக்கியா”… மனைவியின் நடத்தையில் சந்தேகம்… 2 குழந்தைகள் கண் முன்னே துடிதுடிக்க கழுத்தறுத்துக் கொன்ற கணவன்…!

Spread the love

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை அருகே உள்ள பகுதியை சேர்ந்த கங்காதரன் (36) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நந்தினி (29) என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு 7,9 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கங்காதரன் லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இதனால் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தான் குடும்பத்துடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் நந்தினி வீட்டிலேயே இருந்து குழந்தைகளை பார்த்து வந்துள்ளார். அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்லும் கணவர் கங்காதரனுக்கு மனைவி நந்தினியை நடத்தை மீது சந்தேகம் வந்துள்ளது.

இதனால் அடிக்கடி கணவன் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த நந்தினி தன் மகன்களுடன் அவருடைய பெரியம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து கங்காதரன் தனது மனைவியை வீட்டுக்கு அழைத்தும் அவர் வர மறுத்துள்ளார். இந்நிலையில் நேற்று குடிபோதையில் இருந்த கங்காதரன் மீண்டும் தன் மனைவியை தேடி சாலமங்கலத்திற்குச் சென்று சமாதானம் பேசியுள்ளார். அப்போது மீண்டும் மனைவி மீது சந்தேகம் அடைந்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கங்காதரன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து நந்தினியின் கழுத்தை அறுத்துள்ளார்.

இதில் நந்தினி துடி துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கங்காதரனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

6 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

7 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

9 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

9 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

10 மணத்தியாலங்கள் ago