உத்திரபிரதேசம் மாநிலம் பரசுராம்பூர் பகுதியை சேர்ந்த சம்சுதீன் என்பவருடைய மகன் அனீஸ் (25) என்பவருக்கும் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ருக்ஷனா (20) என்ற பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் பகல் 2:00 மணி அளவில் தன்னுடைய வீட்டுக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்த அனிசை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அனீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த வழக்கு குறித்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்ததில் குற்றவாளி அதே பகுதியை சேர்ந்த ரிங்கு (20) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. அதாவது அந்த வாலிபரும் அனீஸ் மனைவியும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதலை அறிந்த பெண்ணின் பெற்றோர்கள் மகளை கண்டித்து மிரட்டி அனீஷுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இருந்தாலும் திருமணத்திற்கு பிறகும் ருக்ஷனா தொடர்ந்து தன்னுடைய காதலருடன் பேசி வந்துள்ளார்.
இதனை அறிந்து அனீஸ் தன்னுடைய மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த ருக்ஷனா நடந்ததை தன் காதலரிடம் கூறியதால் ஆத்திரமடைந்த அவர் ருக்ஷனாவிடம் அவனை கொலை செய்துவிட்டு உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதன்படி தனது நண்பனை கூட்டு சேர்த்துக் கொண்டு அவர் அனிசை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இதற்கு ருக்ஷனாவும் உறுதுணையாக இருந்த நிலையில் தற்போது இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். திருமணம் ஆகிய ஏழு நாட்களில் புதுமணப்பெண் காதலனை ஏவி கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…