“சாலையில் தனியாக உருண்டு வந்த மனைவியின் தலை”… ரத்தம் சொட்ட அரிவாளுடன் நின்ற கணவன்…. குலை நடுங்க வைக்கும் பயங்கர சம்பவம்….!

By Nanthini on பங்குனி 15, 2026

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பெரியகுளம் தெருவைச் சேர்ந்தவர் 26 வயதான முத்துப்பட்டன். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதான சுதா என்பவருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முத்துப்பட்டன் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த நிலையில், சுதா இல்லத்தரசியாக இருந்து குழந்தைகளைப் பராமரித்து வந்தார். இந்நிலையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் சுதாவிற்குப் பழக்கம் ஏற்பட்டு, அது திருமணத்தைத் தாண்டிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது.

முத்துப்பட்டன் வீட்டில் இல்லாத நேரங்களில் சுதா அந்த வாலிபருடன் தனிமையில் இருந்து வந்ததை அக்கம்பக்கத்தினர் கவனித்து இது குறித்து பேசி வந்தனர். இந்தத் தகவல் முத்துப்பட்டனின் காதுகளுக்கு எட்டியதை அடுத்து, அவர் மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தார். இது குறித்து மனைவியிடம் அவர் தட்டிக்கேட்டபோது, இருவருக்கும் இடையே அடிக்கடி கடுமையான வாக்குவாதங்களும் தகராறுகளும் ஏற்பட்டு வந்துள்ளன.

   

இந்தச் சூழலில், நேற்று காலை வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட்டு இரவு முத்துப்பட்டன் வீடு திரும்பியபோது, சுதா வீட்டில் இல்லை. மனைவியைத் தேடிச் சென்ற முத்துப்பட்டன், அவர் அந்த வாலிபரின் வீட்டில் இருந்து வெளியே வருவதைக் கண்டு கடும் ஆத்திரமடைந்தார். ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுதாவின் தலையைத் துண்டித்து, சாலையில் வைத்துவிட்டுச் சென்றார். இந்தச் சம்பவத்தைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

   

உடனடியாக இது குறித்து அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த சுதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக முத்துப்பட்டனைக் கைது செய்துள்ள காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவம் அம்பாசமுத்திரம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.