ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில், தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்திய காதலியை, கள்ளக்காதலியின் உதவியுடன் வாலிபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பலியான பெண் உஷா ராணி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பாகப் போலீசார் அவரது காதலன் புவனேஸ்வர், கள்ளக்காதலி கிருபாராணி மற்றும் நண்பர் தேஜேஸ்வர ராவ் ஆகிய மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட உஷா ராணி கடந்த அரசாங்கத்தில் தன்னார்வலராகப் பணியாற்றியபோது, சக தன்னார்வலரான புவனேஸ்வருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, புவனேஸ்வருக்கு மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியராகப் பணிபுரியும் திருமணமான பெண் கிருபாராணியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உஷா ராணி தன்னைத் திருமணம் செய்ய வற்புறுத்தியபோது, கள்ளக்காதலைத் தொடர விரும்பிய புவனேஸ்வர் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
சம்பவத்தன்று, புவனேஸ்வர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து உஷா ராணியைத் திட்டமிட்டு காரில் அழைத்துச் சென்றுள்ளார். பயணத்தின் போது அவருக்கு மயக்கமடையச் செய்யும் பானத்தைக் கொடுத்து, பின்னர் மூச்சுத்திணறல் ஏற்படுத்திக் கொலை செய்துள்ளனர். கொலையை மறைப்பதற்காக, முதலில் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் உடலை வீசியுள்ளனர். ஆனால் அங்கு உடல் கண்டறியப்படும் அபாயம் இருந்ததால், அங்கிருந்து சடலத்தை எடுத்துச் சென்று வேறு இடத்தில் மறைக்க முயன்றுள்ளனர்.
இறுதியாக, துமராடா கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் சடலத்தை வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். கடந்த ஜூன் 9 அன்று குளத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் புவனேஸ்வர் மற்றும் அவருக்குத் துணையாக இருந்த மற்ற இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான மூவரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…