“என் பொண்டாட்டியை தொடாத டா”…. கள்ளக்காதலனைக் கொன்று பழிதீர்த்த கணவன்… திருவள்ளூரில் நடந்த படுபயங்கரம்…!

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள மாகரல் பகுதியில் வசித்து வந்த சின்னப்பன் (50) என்பவர், தனது வீட்டிலேயே மிக்சர் மொத்த விற்பனைக் கடை நடத்தி வந்தார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த தேவி மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த பஞ்சானன் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இதற்கிடையில், சின்னப்பனுக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரது மனைவி பிரிந்து சென்றார். இந்த சூழலில், சின்னப்பனுக்கும் தேவிக்கும் இடையே திருமணத்தைத் தாண்டிய உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தேவியின் கணவர் சரவணன், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து, அவரை வேலைக்குச் செல்ல வேண்டாம் என பலமுறை எச்சரித்திருக்கிறார். ஆனால், தேவி தொடர்ந்து சின்னப்பனின் கடைக்குச் சென்று வந்ததால், ஆத்திரமடைந்த சரவணன், தனது தந்தையுடன் சேர்ந்து சின்னப்பனைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார். அதன்படி, கடையை முடித்துவிட்டு வீடு திரும்பிய சின்னப்பனை வழிமறித்து, இருவரும் கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

மறுநாள் காலை, வேலைக்கு வந்த பஞ்சானன், ரத்த வெள்ளத்தில் சின்னப்பனின் உடலைக் கண்டு பயந்து ஓடியுள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், பஞ்சானன் தான் கொலையைச் செய்ததாகக் கருதி வெங்கல் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பியதுடன், சந்தேகத்தின் பேரில் பஞ்சானனை முதலில் கைது செய்து விசாரணை நடத்தினர்.

பஞ்சானனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், தேவி மற்றும் அவரது கணவர் சரவணனிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். இதில், கள்ளக்காதல் விவகாரத்தில் ஆத்திரமடைந்த சரவணனும், அவரது தந்தை சுபாஷும் இணைந்து சின்னப்பனைக் கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“பேச்சுவார்த்தை தோல்வி.. இனி ஆட்டம் வேற மாதிரி”… இஸ்ரேலில் 6500 டன் ஆயுதங்களை குவித்த அமெரிக்கா.. நடுங்கும் ஈரான்…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஈரானிய கடற்படையை…

7 minutes ago

பகீர் ரெய்டு..! மதுக்கடையைப் புகுந்து துவம்சம் செய்த கிராமத்து தாய்மார்கள்… குடிகார கணவன்மார்களால் வந்த வினை.. அதிரும் உபி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மதுக்கடையால் தங்கள் குடும்பங்கள் சீரழிவதைக் கண்டு கொதித்தெழுந்த பெண்கள்,…

12 minutes ago

படுக்கைக்கு அழைத்த ‘பெண் அதிகாரி’… மறுத்த இந்திய ஊழியருக்கு நேர்ந்த கதி? உலகையே அதிரவைத்த ஜேபி மோர்கன் வழக்கு…. ஷாக் பின்னணி…!

அமெரிக்காவின் முன்னணி நிதி நிறுவனமான ஜேபி மோர்கன் (JPMorgan) வங்கியின் லிவரேஜ்டு ஃபைனான்ஸ் பிரிவின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய லோர்னா…

15 minutes ago

மேடையிலிருந்து குதித்த மணப்பெண்.. மாலை மாற்றும் நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. கௌரவம் பார்க்கப்போய் நடுத்தெருவுக்கு வந்த தந்தை..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியில், திருமண மேடையிலேயே மணப்பெண் செய்த அதிரடி காரியம் ஒட்டுமொத்த ஊரையும் அதிர வைத்துள்ளது.…

17 minutes ago

இனி ஹார்முஸ் இல்லவே இல்லை…உலகத்தையே அதிரவைத்த ட்ரம்ப்பின் ஒற்றை ‘மேப்’ பதிவு… உலக அரசியலில் ட்ரம்ப் பிராண்ட்…!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றமான சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை "ட்ரம்ப் ஜலசந்தி"…

20 minutes ago

“மரணத்திலும் பிரியாத பாசம்!”… நர்மதை ஆற்றில் மூழ்கிய தாய்-மகன்… மீட்புக் குழுவினரையே நிலைகுலையச் செய்த அந்தக் காட்சி…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதை ஆற்றின் பர்கி அணைப் பகுதியில் நிகழ்ந்த கோரப் படகு விபத்து, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.…

27 minutes ago