திரைப்படத்தை மிஞ்சும் நிஜம்..! 2002-ல் கொலை… 24 ஆண்டுகள் தலைமறைவு… போலீசுக்கு தண்ணி காட்டிய ‘கில்லர்’ ஃபிரோஜ் சிக்கியது எப்படி?…!!

Spread the love

2002-ம் ஆண்டு டெல்லி துக்ளகாபாத் வனப்பகுதியில் கலாம் அன்சாரி என்பவர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். ஃபிரோஜின் சகோதரர் தற்கொலை செய்து கொண்டதற்கு கலாம் அன்சாரியின் குடும்பத்தினரே காரணம் என ஃபிரோஜ் கருதியுள்ளார். இந்தப் பழிவாங்கும் நோக்கத்திலேயே, பீகாரில் இருந்து டெல்லிக்கு வேலை தேடி வந்த அன்சாரியை ஃபிரோஜ் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கல்லால் அடித்துக் கொலை செய்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

குற்றம் நிகழ்ந்த உடனேயே அங்கிருந்து தப்பிய ஃபிரோஜ், பீகார் சென்று அன்சாரி குறித்து தவறான தகவல்களைப் பரப்பியுள்ளார். அதன் பிறகு தனது சொந்த ஊருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொண்ட அவர், காவல்துறையிடம் சிக்காமல் இருப்பதற்காகத் தனது அடையாளத்தை முழுமையாக மாற்றி தலைமறைவானார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து, திருமணம் செய்து கொண்டு தனது கடந்த கால வாழ்க்கையை முற்றிலும் மறைத்து வாழ்ந்து வந்துள்ளார்.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் சமீபத்தில் மீண்டும் விசாரிக்கத் தொடங்கினர். பழைய ஆவணங்கள் மற்றும் புதிய தரவுகளைக் கொண்டு பீகார் உள்ளிட்ட பல இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்தத் தொடர் கண்காணிப்பின் பலனாக, ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே உள்ள மானேசர் பகுதியில் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தையல்காரராகப் பணிபுரிந்து வந்த 48 வயதான ஃபிரோஜ் 24 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இத்தனை ஆண்டுகள் யாரிடம் தொடர்பில் இருந்தார், எப்படித் தப்பி வாழ்ந்தார் என்பது குறித்த அடுத்தக்கட்ட விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Gayathri

Recent Posts

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

4 minutes ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

7 minutes ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

17 minutes ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

25 minutes ago

அடபாவேமே..! “நிறுத்தவே இல்லை”… கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த கார்… சந்தையில் அலறியடித்து ஓடிய மக்கள்… பதறவைக்கும் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…

25 minutes ago

மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞர்… 3 பேருக்கு மறுவாழ்வு தந்த உறுப்பு தானம்… மனைவியின் நெகிழ்ச்சி செயல்…!!

குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…

34 minutes ago