தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் அதே பகுதியில் தனியார் வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். இவருக்கும் ஊத்து மலையை சேர்ந்த காளீஸ்வரி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் பாலசுப்பிரமணியம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் காளீஸ்வரி தனது குழந்தைகளுடன் அவருடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
அப்போது அவருடைய சொந்த ஊரான ஊத்துமலை பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்ற போது அந்த திருவிழாவில் கலந்துகொள்ள அவருடைய மனைவியின் வீட்டுக்குச் சென்ற பாலசுப்பிரமணியன் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அன்று இரவு மனைவி மற்றும் குழந்தைகளை தன்னுடன் அனுப்புமாறு மாமியாரிடம் கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதால் அவர்களை அனுப்பி வைக்க மாமியார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மாமியார் மற்றும் மருமகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தென்காசிக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை மீண்டும் பாலசுப்பிரமணியன் ஊத்துமலையில் உள்ள மனைவி வீட்டுக்கு சென்று மனைவி காளீஸ்வரி மற்றும் மாமியாரை அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு ஏற்கனவே அவர்கள் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காளீஸ்வரி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் அவருக்கு மட்டும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாமியார் உயிரிழந்த விவகாரத்தில் மருமகனை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…