ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அங்கன்வாடி மேற்பார்வையாளர் முகேஷ் குமாருக்கு 37 வயதாகவும் நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவருக்கு பள்ளி ஆசிரியர் மனாராம் என்பவருடன் கடந்த ஆண்டு facebook மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுடைய நட்பு நாளடைவில் காதலாக மாறிய நிலையில் முகேஷ் குமாரி தன்னுடைய காரில் சுமார் 600 கிலோ மீட்டர் பயணம் செய்து அடிக்கடி அவரை சந்தித்து வந்துள்ளார்.
முகேஷ் குமாருக்கு ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்ட நிலையில் மனாராமுக்கு விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இப்படியான நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முகேஷ் குமாரி வற்புறுத்திய நிலையில் அதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முகேஷ் குமாரி தன்னுடைய காரில் காதலர் கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவருடைய வீட்டுக்குச் சென்று தங்கள் உறவு குறித்து குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த மனாராம் காவல்துறையினரை அழைத்துள்ளார்.
பின்னர் காவல் துறையினர் இருவரிடமும் பேசி இந்த பிரச்சனையை தீர்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். இந்த சூழலில் அன்று மாலையே மனாராம் ஒரு இரும்பு கம்பியால் முகேஷ் குமாரின் தலையில் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். பிறகு அவருடைய உடலை தனது காரில் வைத்து விபத்து நடந்தது போல நாடகமாடியுள்ளார். மறுநாள் காலை தனது வழக்கறிஞர் மூலமாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கிய போது, அனைத்து உண்மையும் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்துள்ள போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
