“கல்யாணம்லாம் வேணாம் பணம் மட்டும் கொடு போதும்”… தொல்லை கொடுத்த கள்ளக்காதலன்… கூலிப்படையை ஏவி இரவோடு இரவாக காதலி செய்த கொடூரம்…!

By Nanthini on மார்கழி 6, 2025

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மாறச்சந்திரம் கிராமத்தை சேர்ந்த ஹரிஷ் (32) என்பவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை தலைவர் பிரஷாந்த் என்பவருக்கு கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். ஹரிசுக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் ஓசூர் வானவில் நகரை சேர்ந்த 35 வயதுடைய மஞ்சுளா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மஞ்சுளா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இவர்களுடைய பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி உள்ளது. இதனால் ஹரிஷ் அடிக்கடி தனது காதலி வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

அதேபோல கடந்த இரண்டாம் தேதி இரவு ஹரிஷ், மஞ்சுளாவின் வீட்டுக்கு சென்று விட்டு பிறகு இரவு 9 மணி அளவில் அங்கிருந்து தன்னுடைய இருசக்கர வாகனத்தில் திரும்பிய போது அவரை வழிமறித்த மறும நபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தி ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதனைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஹரி சுடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மஞ்சுளாவை அழைத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

   

விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது ஹரிஷ் மஞ்சுளாவிடம் அடிக்கடி பணம் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் கிட்டத்தட்ட 80 லட்சம் ரூபாய் வரை மஞ்சுளா ஹரீஸுக்கு பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் மஞ்சுளா தன்னை திருமணம் செய்து கொள்ளக் கூறி ஹரிசை தொந்தரவு செய்த நிலையில் திருமணத்திற்கு மருத்து வந்த ஹரிஷ் பணம் கேட்டு மஞ்சுளாவை தொல்லை செய்துள்ளார்.

   

இதனால் ஆத்திரமடைந்த மஞ்சுளா தனது காதலனை தீர்த்து கட்ட முடிவு செய்து கூலிப்படைக்கு பணம் கொடுத்து ஏவி விட்டிருக்கிறார். அதன்படி கடந்த இரண்டாம் தேதி இரவு ஹரி கூலிப்படையாள் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மஞ்சுளா மற்றும் ஓசூரை சேர்ந்த ஏழு பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.