“எதுக்குடா இவ்வளவு வேகமா போறீங்க”… ஏரியாவில் மாஸ் காட்டிய நண்பர்கள்… இரவோடு இரவாக வாலிபர்கள் செய்த கொடூரம்…!

Spread the love

சென்னை புளியந்தோப்பு காந்திநகர் ஆறாவது தெருவை சேர்ந்த விஜயராஜ் (20) என்பவர் தனது நண்பரான பிரதீபன் என்பவர் உடன் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் காந்திநகர் மூன்றாவது தெரு வழியாக தங்களுடைய இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலர் ஏன் இந்த பக்கம் இவ்வளவு வேகமாக வரீங்க என்று கூறி தகராறு செய்துள்ளனர். அதற்கு விஜயராஜ் மற்றும் அவருடைய நண்பர் பிரதீபன், எங்கள் வண்டி நாங்கள் எப்படி வேண்டுமானாலும் ஓட்டுவோம் என்று திமிராக பதிலளித்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட தகராறு நடந்துள்ளது. உடனே பகுதி மக்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

அப்போது ஆத்திரமடங்காத எதிர் தரப்பை சேர்ந்த மதன் என்பவர் வீட்டுக்குச் சென்று கத்தியை எடுத்துக்கொண்டு தனது நண்பர்களுடன் விஜயராஜ் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த விஜயராஜை எழுப்பி வம்பிழுத்த மதன் அவரிடம் வாக்குவாதம் செய்து அவரை வெட்ட முயற்சித்துள்ளார். அப்போது மதனுடன் இருந்த அவருடைய நண்பர் மணிகண்டன் கத்தியை வாங்கி விஜயராஜை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த விஜயராஜ் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது குறித்து தகவல் அறியும் இது சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மணிகண்டன் மற்றும் மதன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

“எல்லாரும் உடனே வாங்க” தவெக எம்எல்ஏக்களுக்கு விஜய் போட்ட உத்தரவு… பரபரக்கும் தமிழகம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மைக்கு…

41 minutes ago

BREAKING: அதிமுக MLA-க்கள் 6 பேர் மாயம்..? பயங்கர அதிர்ச்சியில் எடப்பாடி… நொடிக்கு நொடி பரபரப்பு..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், 6 முக்கியமான எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை…

46 minutes ago

திக் திக்..! ஒருபுறம் டிவி.. மறுபுறம் கடிகார முட்கள்… எப்போது அறிவிப்பார்..? திருமாவின் முடிவுக்காக காத்திருக்கும் தமிழ்நாடு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு…

53 minutes ago

விஜய் எங்களுக்கு மாமனா..? மச்சானா..? எனக்கு அதை பார்த்ததும் ஒரே ஷாக்… TTV தினகரன் பரபரப்பு பேட்டி..!!

அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்ததாக வெளியான கடிதம் குறித்து டிடிவி தினகரன் கடும்…

57 minutes ago

FLASH NEWS: விஜய்க்கு இன்று பதவிப்பிரமாணம் இல்லை… சென்னையில் உருவானது பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!!

தமிழக அரசியல் சூழலில் நடிகர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க…

1 மணத்தியாலம் ago

விஜய் செய்த போர்ஜரி வேலை… தைரியமிருந்தா அதை செஞ்சிருக்கலாமே… அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்த TTV..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆட்சி அமைப்பதற்காக ஆளுநரிடம் சமர்ப்பித்த ஆதரவு கடிதத்தில் தனது கட்சியின் எம்.எல்.ஏ கையெழுத்தைப்…

1 மணத்தியாலம் ago