திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பிரஷாந்த் (17) என்பவர் அதே பகுதியில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகின்றார். இதனிடையே அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பிரசாந்துக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் காதலித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் அடிக்கடி வெளியில் செல்வது எப்போதும் போனில் பேசிக் கொள்வது என தொடர்ந்து நெருக்கமாக பழகி வந்த நிலையில் மாணவியின் பெற்றோருக்கு இவர்களுடைய காதல் விவகாரம் தெரிய வந்தது.
இதனால் முதலில் மாணவியை பிரசாந்துடன் பேச வேண்டாம் என்று கண்டித்தனர். இருந்தாலும் மாணவி தொடர்ந்து பிரசாந்துடன் பேசி வந்ததால் இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர்கள் பிரசாந்தை எங்கள் மகளுடன் பேச வேண்டாம் இது சரிவராது என்று கூறியுள்ளனர். ஆனால் அதையும் காதில் வாங்கிக் கொள்ளாத இளம் ஜோடிகள் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இருவரும் சேர்ந்து அடிக்கடி வெளியூர் சென்று சுற்றியுள்ளனர். இதனைப் பார்த்த மாணவியின் உறவினர்கள் பெற்றோரிடம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மாணவியை பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்று கூறி பள்ளியை விட்டு நிறுத்தியுள்ளனர்.
இதனால் தினமும் மாணவி அவர்களது பெற்றோர்களிடம் வாக்குவாதம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவியின் அண்ணனான சரவணன் தனது நண்பர்களுடன் சென்று பிரசாந்திடம் வாக்குவாதம் செய்தார். அப்போது ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் தான் மறைத்து வைத்திருந்த அறிவாளை எடுத்து சரவணன் பிரசாந்தை சரமாரியாக வெட்டினார். மேலும் என் தங்கச்சியை லவ் பண்ணுவியா என்று சொல்லி மிரட்டி விட்டு அந்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனைப் பார்த்த பகுதி மக்கள் உடனே பிரசாந்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உடனே தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கல்லூரி மாணவன் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர். நடுரோட்டில் வைத்து வாலிபர் அறிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
