“அவள் எனக்கு மட்டும்தான் சொந்தம்”… ஒரே பெண்ணுடன் இருவர் கள்ளக்காதல்… கண்ணைத் தோண்டி, ஆணுறுப்பை அறுத்து நடுரோட்டில் வீசிய கொடூரம்…!

By Nanthini on ஐப்பசி 8, 2025

Spread the love

விழுப்புரம் மாவட்டம் மரகதபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கரும்பு தோட்டத்திற்கு வேலைக்கு சென்று தன் குடும்பத்தை நடத்தி வருகிறார். அப்போது ஷங்கருக்கும் அவருடன் கரும்பு தோட்டத்தில் வேலை கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்து அம்பிகா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் ஒரு கட்டத்தில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. சங்கர் தினமும் வேலையை முடித்துவிட்டு தன்னுடைய வீட்டுக்கு செல்லாமல் எப்போதும் அம்பிகாவின் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் இருவேல் பட்டு பகுதியை சேர்ந்த அன்பு என்பவரும் அடிக்கடி வேலையின் காரணமாக மரகதபுரம் பகுதிக்கு வந்து சென்றுள்ளார். அப்போது அம்பிகாவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர்.

இதனை அறிந்த ஷங்கர் அம்பிகாவிடம் அன்பு விடம் பேசக்கூடாது என்று கூறியுள்ளார். இருந்தாலும் தொடர்ந்து அம்பிகா பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கர் ஒரு நாள் அம்பிகாவிடம் இதைப் பற்றி கேட்டு தாக்கியுள்ளார். அம்பிகா மூலமாக அன்புவுக்கு போன் செய்து இனிமேல் இவரிடம் பேசக்கூடாது, நானும் அவளும் பல வருடங்களாக பேசி வருகிறோம், அவை எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று கூறி மிரட்டி உள்ளார். அதற்கு அன்பு அம்பிகாவுக்கு என்னுடன் பேச பிடித்திருக்கிறது, அதனால் நான் பேசுவேன் என்று கூறியுள்ளார்.

   

இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஷங்கர் அன்பு வைத்த தகாத வார்த்தைகளால் பேசி திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அன்பு சங்கரை கொலை செய்ய முடிவு செய்தார். தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு அன்பு இரவு அம்பிகா வீட்டுக்குச் சென்று அங்கு உறங்கிக் கொண்டிருந்த ஷங்கரை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். அவருடைய கண்களை காயப்படுத்தியும் ஆணுறுப்பை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். உடனே அவர்கள் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை நீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.