BREAKING: வரலாறு காணாத புதிய உச்சம்… ஒரே நாளில் 2 முறை உயர்வு… ரூ.91 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை…!

By Nanthini on ஐப்பசி 8, 2025

Spread the love

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக மீண்டும் அதிகரித்துள்ளது. காலையில் சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்த நிலையில், சற்றுமுன் மேலும் 680 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் வரலாறு காணாத புதிய உச்சமாக ஒரு கிராம் ரூ.11,385-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.91,080-க்கும் விற்பனையாகிறது. இது வரும் நாட்களிலும் நீடிக்கும் என தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.