திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பியார் சோலா பகுதியில் குழந்தை இயேசு என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரிசிலா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் பிரிசிலாவின் தாய் மாமன் மகனான பிரேம் என்பவருடன் குழந்தை இயேசுவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் சேர்ந்து அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனிடையே பிரேமுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு திருப்பூரில் வாழ்ந்து வந்துள்ளார்.
பிரேம் குழந்தை இயேசுவிடம் பங்களா வாங்க வேண்டும் என்று தெரிவித்து வந்த நிலையில் கொடைக்கானல் பகுதியில் ஒரு பங்களா விலக்கி வந்திருப்பதை அறிந்த குழந்தை இயேசு இதனை பிரேமுக்கு தெரிவிப்பதற்காக அவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு உள்ளார். அவர் போன் எடுக்காத நிலையில் அவரை facebook மூலமாக தொடர்பு கொள்ள முயற்சித்தார். அப்போது குழந்தை இயேசுவின் போனை எடுத்த பிரேமின் மனைவி, அவர் இங்கு இல்லை வேலைக்கு சென்று உள்ளார் என்று கூறியுள்ளார். பிறகு பிரேமின் பிள்ளைகள் குழந்தை இயேசுவிடம் உறவினர் என்ற முறையில் வீடியோ கால் பேசியுள்ளனர். இதனை அறிந்த பிரேம் அவருடைய மனைவி மற்றும் குழந்தை இயேசு இருவரும் தொடர்பு வைத்திருப்பதாக நினைத்து முதலில் மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
பிறகு வழக்கம் போல குழந்தை இயேசுவை மது அருந்த தனியாக அழைத்துச் சென்று இருவரும் ஒன்றாக மது அருந்திய நிலையில் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பிரேம் என் பொண்டாட்டி கூட பேச நீ யாருடா என்று கேட்டு குழந்தை இயேசுவை கையில் இருந்த பீர் பாட்டிலை வைத்து தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேமை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்று, தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள விஜய், தனது முதல் நாளிலேயே தேர்தல் வாக்குறுதிகளை…
சென்னையில் பதிவு செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோருக்குச் சென்றடைவதில் தொடர் தாமதம் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று…
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 மே 9-ஆம் தேதி ஒரு முக்கிய மைல்கல்லாக பதிவாகியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்…
தமிழகத்தின் முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் (விஜய்) இன்று (மே 10, 2026) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்றார்.…