அடேங்கப்பா…2057-ல் வாழ்றாங்க…! “பாட்டு கேட்கலாம், வாய்ஸ் கமாண்ட் கொடுக்கலாம்…” ஜப்பான் ஹைடெக் கழிப்பறையை பார்த்து வியந்த மும்பை யூடியூபர்…! வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ….!!

By Devi Ramu on புரட்டாதி 20, 2026

Spread the love

மும்பையைச் சேர்ந்த பிரபல சோஷியல் மீடியா கண்டென்ட் கிரியேட்டர் சார்த்தக் சச்தேவா ஜப்பானுக்குச் சென்றபோது அங்குள்ள அதிநவீன பொதுக் கழிப்பறை ஒன்றைப் பார்த்து வியந்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அந்த கழிப்பறைக்குச் செல்ல கதவிலுள்ள QR கோடை ஸ்கேன் செய்ய வேண்டும்; உடனே கதவு தானாகத் திறக்கிறது. உள்ளே சென்றதும் “Turn on the sink” எனக் குரல் கொடுத்தால் உடனே குழாயில் தண்ணீர் வருகிறது. மேலும் கழிப்பறையைப் பயன்படுத்தும் போது பாட்டு கேட்கும் வசதியும், ஜப்பானிய மற்றும் ஆங்கில மொழிகளில் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

https://www.instagram.com/reel/DdZSaQfMw3R/?utm_source=ig_web_copy_link&stkn=NTc4MTIwNjQ2YQ==

   

ஒரு டோம் வடிவ அமைப்பிற்குள் இயங்கும் இந்த ஹைடெக் கழிப்பறையைப் பார்த்து பிரமீத்துப் போன சார்த்தக், “ஜப்பான் உண்மையிலேயே 2057-ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த வீடியோ, ஜப்பானின் அசாத்திய தொழிற்நுட்பத்தைப் பார்த்து நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.