“அதிகாலை 3 மணி, ஆழமான தூக்கம்”… அடுத்த சில நிமிடங்களில் சாம்பலான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 உயிர்கள்….!

Spread the love

மும்பையில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் கோரேகான் மேற்கு பகுதியில் உள்ள பகத்சிங் நகரில், அதிகாலை 3 மணியளவில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது ஒரு வீட்டில் திடீரென தீப்பற்றியது. இந்தத் தீ மளமளவென வீட்டின் தரைத்தளம் மற்றும் முதல் தளம் முழுவதும் பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மீட்டபோது, துரதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த மூவரும் உயிரிழந்திருந்தனர்.

இந்த கோர விபத்தில் சஞ்சோக் பவாஸ்கர் (48), ஹர்ஷதா பவாஸ்கர் (19) மற்றும் குஷால் பவாஸ்கர் (12) ஆகிய மூவர் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டவுடன் அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றபோதும், தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால் உயிரிழப்புகளைத் தடுக்க முடியவில்லை. மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்டமாக சந்தேகிக்கப்படும் நிலையில், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

4 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

5 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

5 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

5 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

5 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

5 மணத்தியாலங்கள் ago