ஏய் நில்லு நில்லு…. “காரை மறித்து ரூ.8,000 கேட்ட நபர்”… நள்ளிரவில் பிரபல நகைச்சுவை நடிகருக்கு நடந்த பகீர் சம்பவம்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ….!

By Nanthini on ஆவணி 10, 2026

Spread the love

பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் அபிஜித் கூங்குலி, மும்பையில் தாம் சந்தித்த அதிர்ச்சிகரமான சாலைப் பக்க மோசடி முயற்சி குறித்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜூஹு விலே பார்லே வளர்ச்சி (JVPD) திட்டப் பகுதியிலிருந்து வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையை நோக்கித் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு நபர் அவர் காரை அணுகியுள்ளார். அந்த நபர் அபிஜித்தின் கார் மோதியதில் தனது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, ஒரு சிவந்த வடுவைக் காண்பித்து, தான் ஒரு ஓட்டுநர் என்றும் இந்த விபத்தால் ரூ.8,000 வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி இழப்பீடு கேட்டுப் பிரச்சனை செய்துள்ளார்.

https://www.instagram.com/reel/Db0qtPqMdDn/?utm_source=ig_embed&ig_rid=AiFCH85UhQPY-V3iWEB4-Gz

   

ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்த அபிஜித், அந்த நபரை அமைதிப்படுத்தி அருகில் உள்ள அவசர சிகிச்சை மருத்துவமனைக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளலாம் என அழைத்துள்ளார். ஆனால், மருத்துவ நடைமுறைகளுக்கு அரை மணி நேரம் ஆகும் என்பதை அறிந்ததும் அந்த நபர் தனது நிலையை மாற்றிக்கொண்டு, ரொக்கமாகப் பணம் கொடுத்து விஷயத்தை முடித்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அபிஜித் உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அந்த நபர் காவல்துறைக்கு அழைக்க வேண்டாம் எனக் கூறி, எவ்வளவாவது பணம் தருமாறு பேரம் பேசத் தொடங்கியுள்ளார்.

   

அபிஜித் உறுதியாக நின்று காவல்துறைக்கு அழைத்ததோடு, அந்த நபரின் புகைப்படத்தையும் தனது தொலைபேசியில் படம்பிடித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த அந்த நபர் தனது தொடர்பு விவரங்களை அளிக்க மறுத்து உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக அபிஜித் தெரிவித்துள்ளார். அந்த நபரின் காயம் பழையது போல இருந்ததாகவும், வாகனம் மோதியதாகக் கூறிய விதமும் சந்தேகத்திற்கு இடமாக இருந்ததாகவும் கூறியுள்ள அபிஜித், இதுபோன்ற நபர்களிடம் அவசரப்பட்டு ரொக்கப் பணம் கொடுத்து ஏமாறாமல், உடனடியாகக் காவல்துறையை அணுகுமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.