கீழே விழுந்து மும்பை வீரர் ரகுவன்ஷிக்கு தலையில் காயம்… ரசிகர்கள் பயங்கர அதிர்ச்சி…!!

By Soundarya on மார்கழி 26, 2025

Spread the love

விஜய் ஹசாரே கோப்பை (2025-26) தொடரில் இன்று (டிசம்பர் 26, 2025) நடைபெற்ற போட்டியில் மும்பை வீரர் ரகுவன்ஷியின் தலையில் காயம் ஏற்பட்டது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் உத்தரகாண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்த விபத்து நிகழ்ந்தது. ஆட்டத்தின் 30-வது ஓவரில் தனுஷ் கோடியன் வீசிய பந்தில், பேட்டர் சௌரப் ராவத் அடித்த கடினமான கேட்சை  டைவ் அடித்துப் பிடிக்க முயன்ற போது ரகுவன்ஷியின் தலை தரையில் பலமாக மோதியது.

மைதானத்தில் இருந்து அவர் உடனடியாக ஸ்ட்ரெச்சர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள SDMH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு CT ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ரிசோதனை முடிவுகள் சாதாரணமாக வந்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தங்கும் விடுதிக்குத் திரும்பியுள்ளார். தற்போது அவர் நலமாக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்றும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது