இதென்ன புது ட்ரெண்டா இருக்கு…? ராஜினாமா செய்தால் புதிய ஆள் எடுக்க மாட்டீங்களா…? கார்ப்பரேட் நிறுவனங்களைக் கிழித்த மும்பை பெண் சி.ஏ…!!

By Devi Ramu on புரட்டாதி 4, 2026

Spread the love

நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டுச் சென்றாலோ அல்லது வேலையை விட்டு நீக்கப்பட்டாலோ, அந்த இடத்திற்கு உடனடியாக வேறு ஒரு புதிய ஆளை நியமிக்காமல் இருக்கும் கார்ப்பரேட் கலாச்சாரம் குறித்து மும்பையைச் சேர்ந்த கணக்காளர் சிருஷ்டி ஷார்டா தனது வீடியோவில் மிக காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

“நிறுவனங்களில் ஒருவர் விலகினால், அவருக்குப் பதிலாக புதிய ஆளை நியமிக்காமல், அவரது வேலைப்பளுவை அங்கிருக்கும் மற்ற ஊழியர்களின் தலையில் கட்டிவிடும் இந்த புதிய ட்ரெண்ட் என்ன வகையானது?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வாறு கூடுதல் பொறுப்புகளைச் சுமக்கும் ஊழியர்களுக்கு அதற்கான சம்பள உயர்வோ , பதவி உயர்வோ அல்லது தகுந்த அங்கீகாரமோ வழங்கப்படுவதில்லை என்றும், அதே பழைய சம்பளத்திலேயே கூடுதல் வேலை வாங்கப்பட்டு அவர்கள் சுரண்டப்படுவதாகவும் அவர் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.

   

இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ, கார்ப்பரேட் உலகில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் பலரும் “அதிக வேலை, அதே சம்பளம்” என்ற தங்களின் கசப்பான அனுபவங்களைப் பகிர்வதோடு, பணிச் சூழலில் நியாயமான வேலைப்பளுப் பகிர்வு அவசியம் என ஆதரவளித்து வருகின்றனர்.