“டீ-ல ஏன் சர்க்கரை இல்ல?”… இப்படி பண்ணுவாங்களா?.. கடைக்காரர் சொன்ன ஒரு வார்த்தை… கைகலப்பில் முடிந்த விபரீதம்… அரங்கேறிய பகீர் சம்பவம்…!!

By Gayathri on ஐப்பசி 26, 2026

Spread the love

மும்பையின் ஜோகேஸ்வரி மேற்கு, ஓஷிவாரா ஆனந்த் நகர் பகுதியில் அமைந்திருக்கும் சுன்னி மசூதி அருகே சிறிய தேநீர்க் கடை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அங்கு வழக்கம் போல் வியாபாரம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் தான் வாங்கிய தேநீரில் சர்க்கரை குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்ததாகக் கூறி கடைக்காரரிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தச் சிறிய குறைபாடு இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமாக வெடித்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர், தேநீர் விற்பனையாளரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சர்க்கரை விவகாரத்தில் தொடங்கிய இந்தச் சலசலப்பு இறுதியில் கைகலப்பாக மாறி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.