அந்த ஒரு பாடலுக்கு மட்டும் பல மாதம்.. எம்.எஸ் விஸ்வநாதன் மிகவும் கஷ்டப்பட்டு இசையமைத்த 2 பாடல்கள்..!

By Mahalakshmi on வைகாசி 23, 2024

Spread the love

ரேடியோ காலம் தொடங்கி தற்போது வரை தனது இசையால் பல ரசிகர்களை கட்டிப்போட்டவர் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன். தமிழ் சினிமாவில் எம்கே தியாகராஜ பாகவதர், கேவி மகாதேவன், ஏ.எம். ராஜா என தொடங்கி தற்போது இருக்கும் 2k கிட்ஸ் அனிருத் வரை தமிழ் சினிமாவில் ஏராளமான இசையமைப்பாளர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் மெல்லிசை மன்னர்களின் ஒருவராக பலரின் மனதில் இடம் பிடித்த ஒரே நபர் எம்.எஸ். விஸ்வநாதன் தான்.

   

ஹார்மோனியத்தை எடுத்துக்கொண்டு தனியார் சேனல் நிகழ்ச்சியில் தன்னுடைய தள்ளாத வயதிலும் சென்று குழந்தை போல் பொறுமையாக நிகழ்ச்சியில் பங்கேற்று இளம் தலைமுறைினருக்கு இசை கற்பித்த அவரை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. மலையாள குடும்பத்தை சேர்ந்த எம் எஸ் விஸ்வநாதன் தன் முதல் மேடை ஏறிய போது அவருக்கு வயது 13. சினிமாவை பொறுத்த வரைக்கும் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு முழு முதல் ஆசையாக இருந்தது நடிப்பு தான்.

   

 

ஆனால் அவருக்கு கிடைத்ததோ இசை வாய்ப்பு. எம் எஸ் விஸ்வநாதன் டி. இராமமூர்த்தியுடன் இணைந்து பல படங்களில் இசை அமைத்திருக்கின்றார். அப்படி அவர் இசை அமைத்திருந்த திரைப்படம் தான் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த திரைப்படத்தில் கல்யாணகுமார் ஹீரோவாக நடிக்க தேவிகா, நம்பியார், நாகேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்திருப்பார்கள்.

இந்த படத்தில் அமைந்திருந்த நெஞ்சம் மறப்பதில்லையே என்ற பாடலை இசை அமைக்க பல மாதங்கள் எடுத்துக் கொண்டதாக பலபேட்டிகளில் தெரிவித்திருந்தார் எம் எஸ் விஸ்வநாதன். அப்படி அவர் கஷ்டப்பட்டு இசையமைத்த மற்றொரு பாடல் இருக்கின்றது. அந்த பாடல் அவன் தான் மனிதன் என்ற பாடல். அந்தப் பாடலின் காட்சிகள் தொடர்பாக விளக்கம் கொடுத்தவுடன் அழகான பாடல் வரிகளை எழுதிக் கொடுத்து விட்டார் கண்ணதாசன்.

அந்த பாடலை கையில் வைத்துக்கொண்டு எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்து பார்க்கிறார். என்ன காரணத்தினாலோ அந்த பாடல் சரியான இசை அமையவில்லை. பல நாட்கள் போராடியதற்கு பின்னால் ஒருநாள் அந்த பாடலுக்கு ஏற்ற இசையமைந்தது. அப்படி அமைந்த பாடல் தான் ‘ஆட்டுவித்தால் யார் ஒருவர், ஆடாதொறோ கண்ணா’ அப்பாடல் ரசிகர்களுக்கு பிடித்த போனது என்னுடைய அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டிருக்கின்றார் எம் எஸ் விஸ்வநாதன்.

இந்தப் பாடலை இசையமைக்க இவ்வளவு கஷ்டப்பட்ட நான் மூன்றே நிமிடத்தில் ஒரு பாடலுக்கு இசை அமைத்தேன், அந்தப் பாடல் எதுவென்றால் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம்பெற்று இருந்த ‘முத்தான முத்தல்லவோ’ என்ற தொடங்குகிற பாடல். ஒரு கார் பயணத்தின் போது அந்த மெட்டுக்கான வரிகளை கண்ணதாசன் கூற உடனே நான் மெட்டமைத்தேன். அப்படி உருவானது தான் அந்த பாடல் என்று ஒரு பத்திரிக்கை பேட்டிகளை பதிவு செய்திருக்கின்றார் மெல்லிசை மன்னன் எம் எஸ் விஸ்வநாதன்.