‘கைகள் இழந்த நிலையிலும் இழக்காத நம்பிக்கை’.. கால்களால் கார் ஓட்டி விக்கவைத்த ராகவா லாரன்ஸின் விதை.. வீடியோ..

By Mahalakshmi on மே 23, 2024

Spread the love

இரு கைகளை இழந்த இளைஞன் தனது இரு கால்களால் கார் ஒட்டி சாதனை படைத்துள்ள நிலையில் அதனை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியாக தெரிவித்து இருக்கின்றார். தமிழக மக்கள் மத்தியில் தனது உதவி செய்யும் குணத்தால் அனைவரின் நெஞ்சங்களிலும் வாழ்ந்து வருகிறார் ராகவா லாரன்ஸ்.

   

கோடி கோடியாய் சம்பாதிக்கும் பலரும் பிறருக்கு உதவி செய்ய தயங்கி வரும் நிலையில் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் உதவி செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். அதிலும் மே ஒன்றாம் தேதி முதல் மாற்றம் என்கின்ற அறக்கட்டளை தொடங்கி அதன் மூலம் ஏகப்பட்ட நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.

   

அந்த மாற்றம் அறக்கட்டளையில் தான் தூக்கி வளர்த்த பல இளைஞர்கள் இணைந்து இருக்கின்றார்கள். இதன் மூலம் பலருக்கும் உதவி செய்து வருகின்றார் ராகவா லாரன்ஸ். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த இரண்டு கையை இழந்த தான்சென்
என்ற 31 வயதான இளைஞன் தமிழகத்தின் முதல் கார் ஓட்டுநர் உரிமம் பெற்ற மாற்றுத்திறனாளி என்ற சாதனையை படைத்திருக்கின்றார்.

 

இரண்டு கை மற்றும் இரண்டு கால்கள் நன்றாக இருப்பவர்களை கார் ஓட்டி லைசென்ஸ் வாங்குவது என்பது எளிதானது கிடையாது. ஆனால் இரண்டு கைகளை இழந்த இந்த இளைஞர் முதன்முறையாக கால்களால் கார் ஓட்டி ஓட்டுனர் உரிமம் வாங்கி இருக்கின்றார். சென்னை வியாசர்பாடியில் வசித்து வரும் இந்த இளைஞர் தான் பத்து வயது இருக்கும்போது உயர் அழுத்த கம்பியில் சிக்கியிருந்தால் அவரது கைகள் முழங்கைக்கு கீழே வெட்டி எடுக்கப்பட்டது.

இரண்டு கைகளை இழந்த போதிலும் நம்பிக்கை இழக்காத அவர் தொடர்ந்து தன்னுடைய அன்றாட வேலைகளை செய்ய தொடங்கினார். கால்கள் மூலம் எழுதுவது, நீந்துவது, ட்ரம்ஸ் வாசிக்கவும் கற்றுக் கொண்டார். படிப்பிலும் இன்ஜினியரிங் படித்த இவருக்கு திருமணம் ஆகி ஒன்றரை வயதில் ஒரு மகன் இருக்கின்றார். கார் ஓட்ட வேண்டும் என்ற ஆசைப்பட்ட இவர் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் கூறியிருக்கின்றார்.

அவர்களின் உதவியுடன் கார் ஓட்டுவதற்கும் கற்றுக்கொண்டு ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கின்றார். இதனை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பெருமையாக பகிர்ந்த ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்ததாவது “இதுதான் தான்சென் தம்பி அவர் என்னுடன் பத்து வருடங்களாக இருக்கின்றார்.

 

View this post on Instagram

 

A post shared by Ragava Lawrence (@actorlawrence)

துரதிர்ஷ்டவசமாக ஒரு விபத்தில் சிக்கி தனது இருக்கைகளையும் இழந்தார். ஆனால் என் பையன் எந்த சூழ்நிலையிலும் தன்னை தாழ்த்திக் கொள்ளவில்லை. அவர் மிகவும் கடினமாக உழைத்து தனது கால்களால் கார் ஓட்டுவதை கற்றுக் கொண்டார் மற்றும் வெற்றிகரமாக ஓட்டுனர் உரிமையும் பெற்றார். என் பயனை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கின்றேன்” என்று பகிர்ந்திருந்தார்.