வனிதாவுக்கு தாலி கட்டிய ராபர்ட் மாஸ்டர்… மணக்கோலத்தில் வெளியான வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

By Nanthini on மாசி 15, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் வாரிசு நடிகை தான் வனிதா விஜயகுமார். இவரது தத்தை மூத்த நடிகர் விஜயகுமார் மற்றும் தாயார் நடிகை மஞ்சுளா ஆவார். 1995ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் வனிதா விஜயகுமார். அதைத்தொடர்ந்து மாணிக்கம், தேவி, நான் ராஜாவாக போகிறேன், சும்மா நச்சுனு இருக்கு, ஜெயா ஆகிய திரைப்படங்களில் நடித்தார். ஆனாலும் எதிலும் இவர் பெரிதாக பேசப்படவில்லை. அதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகப் பிரபலமாக ஆனார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாவற்றிற்கும் சண்டையிட்டு வத்திக்குச்சி வனிதா என்று பெயர் வாங்கும் அளவுக்கு புகழ் பெற்றார் வனிதா விஜயகுமார்.

சுபமுகூர்த்தம் எப்போது?.. வனிதா விஜயகுமார் வெளியிட்ட தேதி.. ரசிகர்கள் செம  ஆச்சரியம் | Vanitha Vijayakumar Shares Mrs & Mr Movie Update in Her  Instagram - Tamil Filmibeat

   

அதைத் தொடர்ந்து தயாரிப்பு இயக்கம் போன்றவற்றில் ஆர்வம் காட்டி வந்தார் வனிதா விஜயக்குமார். கடந்த ஆண்டு இவரது மகள் ஜோவிகா விஜயகுமார் பிக் பாஸில் கலந்து கொண்டார். அதற்குப் பிறகு ஜோவிகா விஜயகுமார் வனிதா விஜயகுமார் இருவரும் இணைந்து ஒரு படம் தயாரித்து இயக்கப் போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி ஜோவிகா விஜயகுமார் தயாரித்து வனிதா விஜயகுமார் எழுதி இயக்கி நாயகியாக நடித்த திரைப்படம் தான் Mr & Mrs. இந்தப் படத்தில் நாயகனாக ராபர்ட் நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்த அப்போவே வனிதா என்ன மறுபடியும் திருமணம் செய்ய போகிறாரா என்று நெட்டிசன்கள் பேசி வந்தனர்.

   

Vanitha Vijayakumar: ராபர்ட் மாஸ்டருடன் திருமணமா.?: அதிகாரப்பூர்வ அறிவிப்பை  வெளியிட்ட வனிதா விஜயகுமார்!

 

இப்படியான நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று மாலை Mr & Mrs திரைப்படத்திற்கான பிரமோ வெளியானது. இந்த திரைப்படத்தில் சின்ன திரையில் இருக்கும் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள நிலையில் 40 வயதை தாண்டிய பெண் ஒருவர் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படும் கதையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. நேற்று வெளியான ப்ரோமோவில் ராபர்ட் மாஸ்டர் வனிதாவின் திருமண காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் ராபர்ட் மாஸ்டர் வனிதாவிற்கு தாலி கட்டி முத்தம் கொடுக்க அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், முதல் தடவை திருமணம் செய்து கொள்வது போல வனிதா இப்படி ரியாக்ஷன் கொடுக்கிறாங்களே என்று கலாய்த்து வருகிறார்கள்.

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Jovika Vijaykumar பதிவைப் பகிர்ந்துள்ளார் (@jovika_vijaykumar)