ஆட்சி அதிகாரம் பற்றி மாணிக்கம் தாகூர் பேசியது அவருடைய கருத்து, காங்கிரஸ் கட்சிக்கு எது தேவையோ அதனை கூட்டணி கட்சி தலைவரிடம் பேச்சுவார்த்தையில் நாங்கள் நாகரிகமாக கேட்டு பெறுவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, மாணிக்கம் தாகூர் எங்களின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர். அவருடைய கருத்தை அவர் தெரிவித்துள்ளார். என்னை பொறுத்தவரையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை தெளிவாக இருக்கின்றது. எந்த கட்சியிடம் கூட்டணி தொடர்பாக பேசவில்லை.
திமுக விடம் தான் பேசி வருகின்றோம் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெளிவாக கூறிவிட்டார். இந்தியா கூட்டணி வலிமையான கூட்டணி, இதனை அசைத்துப் பார்க்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒருபோதும் அதனை அசைக்க முடியாது. கருத்து சொல்வதற்கு பேச்சுரிமை, எழுத்துரிமை மற்றும் கருத்துரிமை என அனைத்து உரிமைகளும் உண்டு. அதனை எங்கு பேச வேண்டும் என்று உள்ளது. நான் தலைவராக இருந்து கொண்டு எல்லாவற்றையும் ஊடகங்களிடமே பேசினால் அது தலைமை பண்பு கிடையாது.
எல்லாவற்றையும் ஊடகங்களிடம் பேசிவிட்டால் பிறகு எதற்கு கூட்டணி கட்சிகள். எங்களுக்கு எது தேவையோ அதனை கூட்டணி கட்சித் தலைவரிடம் நாகரிகமாக கேட்டு பெறுவோம். எங்களுக்கு தொகுதி வேண்டும் என்றால் திமுகவிடம் தான் கூற வேண்டும். ஊடகத்திடம் பேசினால், அவர்களாக கூடுதல் தொகுதிகளை பெற்றுத்தர போகிறார்கள். ஊடகம் ஒன்று எதற்காக பேச வேண்டும் என்ற அவசியம் இருக்கிறது. அரைவேக்காடு, தான்தோற்றிதனமாக செயல்படுபவர்கள் காங்கிரஸ் தொண்டர்கள் அல்ல.
தேசிய தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுபவர்கள். பேச்சுரிமை இருக்கிறது அவரவர்கள் பேசுகிறார்கள். நான் அப்படி பேசிவிட முடியுமா? கூட்டணி பேச்சு வார்த்தைக்கு செல்லும்போது காங்கிரஸ் கட்சிக்கு தேவையானதை கேட்டு பெறுவேன் என்று மாணிக்கம் தாகூர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து செல்வ பெருந்தகை பேசி உள்ளார். இதன் மூலம் காங்கிரஸில் தற்போது புதிய பிரச்சனை வெடித்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸில் உட்க்கட்சி பிரச்சனை உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில் தற்போது இவருடைய இந்த பேச்சு அதனை உறுதி செய்துள்ளது.
திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…
மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…