“அடுத்த சீன் இதுதான்”… இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிப்பில் த்ரிஷா…. ஆளுங்கட்சியைத் தோலுரித்த திமுக எம்பி… அரசியலில் புதிய புயல்….!

By Nanthini on ஆவணி 6, 2026

Spread the love

தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையையும், அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளையும் மையமாகக் கொண்டு தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. உதயநிதி தனது உரையில் எந்தவொரு நடிகையின் பெயரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடவில்லை என்றும், அரசியல் சுயலாபத்திற்காக வீடியோவை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.

இந்த விவகாரத்தின் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் திரைக்கதை ஒளிந்திருப்பதாகக் கூறியுள்ள எம்பி அப்துல்லா, அதை மூன்று முக்கியக் காட்சிகளாக விவரித்துள்ளார். முதலாவதாக, சம்பந்தப்பட்ட நடிகை திரிஷா ஊடகங்கள் முன் தோன்றி முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவிப்பார் என்றும்; இரண்டாவதாக, வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக அவர் களம் இறக்கப்படுவார் என்றும்; மூன்றாவதாக, அத்தேர்தல் வெற்றிக்குப் பின் அவர் கட்சியின் முதன்மைத் தலைவர்களில் ஒருவராக முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் கணித்துள்ளார்.

   

மேலும், ஆளும் தரப்பையும் அதன் நிர்வாகிகளையும் கடுமையாக விமர்சித்துள்ள அப்துல்லா, ஒரு நடிகையைக் கட்சிக்குள் கொண்டுவந்து முன்னிலைப்படுத்துவதற்கு எதற்காக உதயநிதி ஸ்டாலின் மீது வீண் பழியும், காவல்துறை மூலம் கைது நாடகமும் நடத்தப்பட வேண்டும் என்று காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். கட்சியின் தொண்டர்களும் அமைச்சர்களும் இந்த அரசியல் நகர்வுகளைக் கண்டு எந்த கேள்வியும் கேட்காமல் அமைதி காப்பார்கள் என்றும் தனது பதிவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

   

திமுக எம்பி அப்துல்லாவின் இந்த அதிரடிப் பதிவு, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடையே கடுமையான கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரத்திலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே திமுகவினர் இதுபோன்ற கற்பனைக் கதைகளைப் பரப்பி வருவதாக தவெக ஆதரவாளர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இரு தரப்பினரின் இந்தத் பரஸ்பரக் குற்றச்சாட்டுகளால் தமிழக அரசியல் களம் தற்போது கடும் சூடு பிடித்துள்ளது.