திக் திக் நிமிடங்கள்!… துப்பாக்கிச் சத்தத்தால் நடுங்கிய மலைகள்… 9 உயிர்களைக் பலிவாங்கிய கோர மோதல்… மணிப்பூரில் மீண்டும் வெடித்த பயங்கரம்… நெஞ்சை பதைபதைக்கும் சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 12, 2026

Spread the love

மணிப்பூரின் மலைப்பகுதிகளில் குக்கி மற்றும் நாகா ஆயுதக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட புதிய மோதல்களில் ஒன்பது பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக நிலவி வரும் பதற்றத்திற்கு மத்தியில் நடந்த இந்த கொடூரத் தாக்குதல்கள், இரு தரப்பினரிடையே மோதல் மேலும் தீவிரமடையக்கூடுமோ என்ற அச்சத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

இந்த வன்முறைச் சம்பவங்களை அடுத்து, அமைதியைக் கடைப்பிடிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தீவிர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அசாதாரண சூழலைக் கட்டுக்குள் கொண்டுவரவும், வன்முறை மேலும் பரவுவதைத் தடுக்கவும் பாதுகாப்புப் படையினர் கூடுதல் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

   

தற்போது இப்பகுதியில் தொடர் பதற்றம் நிலவி வருவதால், வன்முறைச் சம்பவங்கள் மேலும் விபரீதமான கட்டத்திற்குச் செல்லாமல் இருக்க அரசு மற்றும் அமைப்புக் குழுக்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நிலைமையைச் சமாளிக்க உளவுத்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் படையினரும் முழு எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.