சாலையோரத்தில் உள்ள இரும்பு வேலி அருகில் ஒரு நபர் வெள்ளைச் சட்டையுடன் நின்று சிறுவன் ஒருவனைத் தள்ளியும், உதைத்தும் துன்புறுத்தும் அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவனுடன் இருந்த மேலும் இரண்டு நபர்கள் ஒரு சிறுமியை கைப்பிடித்து railing-ல் தள்ளிப் பிடித்துக்கொண்டு தொடர்ந்து அடிக்கும் கொடூர சம்பவமும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. பகிரங்கமான இந்தத் தாக்குதல் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பையும், பாதுகாப்பற்ற சூழல் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த மனிதாபிமானமற்ற வன்கொடுமைக்கு எதிராக அனைத்து தரப்பினரிடமிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதைச் சுட்டிக்காட்டும் மனித உரிமை ஆர்வலர்கள், வீடியோவில் பதிவாகியுள்ள இந்த வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். பொது இடங்களில் நடக்கும் இதுபோன்ற வன்முறைச் செயல்கள் சமூகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்புவதோடு, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதன் அவசியத்தையும் உணர்த்துகின்றன.
சிறுவன் மற்றும் சிறுமி மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்திய தொடர்புடைய நபர்களைக் கண்டறிந்து கைது செய்யக் கோரி சமூக வலைதளங்களில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்வதைத் தடுத்து நிறுத்தக் கடுமையான சட்ட விதிகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது. இந்தச் சம்பவம் குறித்த முழுமையான விசாரணைக்குப்பின் சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
