அடச்சீ…நீயெல்லாம் ஒரு மனுஷியா… அம்மா வலிக்குதுமா விட்டுடு… கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனின்… மூச்சை நிறுத்திய கொடூர தாய்… அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on ஆவணி 19, 2026

Spread the love

சிக்காபனவரா பகுதியில் உள்ள வீடொன்றில் கணவர் அபிநந்தன் மற்றும் அவரது சிறுவன் யதுவீர் ஆகியோர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தது தொடர்பாக, மனைவி ஹரிணி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரது கள்ளக்காதலன் வினய் குமார் என்பவரைப் பிடித்துக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அபிநந்தனின் தாய் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஓராண்டுக்கு முன்பு வினய் குமாருடன் ஓடிப்போன ஹரிணி, பின்னர் கணவரிடமே மீண்டும் திரும்பியதும், இருப்பினும் தம்பதியரிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

கணவரைக் கொலை செய்ய ஹரிணி, வினய் குமாருடன் இணைந்து திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, ஞாயிறு மற்றும் திங்கள் இடைப்பட்ட இரவில், உறங்கிக் கொண்டிருந்த அபிநந்தனை இருவரும் சேர்ந்து மூச்சுத்திணறடித்துக் கொலை செய்ய முயன்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக விழித்துக் கொண்ட சிறுவன் யதுவீர், இந்தத் தாக்குதலைப் பார்த்துவிட்டான். இதனால் குற்றத்தை மறைக்கவும், சாட்சி இல்லாமல் செய்யவும் அச்சிறுவனையும் அவர்கள் மூச்சுத்திணறடித்துக் கொலை செய்ததாகக் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

   

சம்பவத்திற்குப் பிறகு, ஹரிணி தவறான தகவல்களைக் கூறி காவல்துறையைத் திசைதிருப்ப முயன்றுள்ளார். ஆனால், அவரது முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சந்தேகமடைந்த அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது ஹரிணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வினய் குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இக்கொலையின் முழுமையான பின்னணி, காரணம் மற்றும் இருவரின் பங்களிப்பு குறித்துக் காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.