“உங்களுக்கு கெட்ட செய்தி, எனக்கு நல்ல செய்தி” கணவனுக்கு போன் போட்டு மனைவி சொன்ன ஷாக் நியூஸ்… இவளெல்லாம் ஒரு தாயா..? நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

By Soundarya on சித்திரை 2, 2026

Spread the love

ஆந்திரப் பிரதேசத்தில் தாயே தனது 5 மாதக் குழந்தையை ஆத்திரத்தில் கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணிற்கு ஒரு மகனும், 5 மாத பெண் குழந்தையும் இருந்த நிலையில், காலையில் அவரது கணவர் வேலைக்குச் சென்றுள்ளார். வீட்டில் இருந்த குழந்தை பசியால் பால் கேட்டுத் தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. குழந்தையின் அழுகைச் சத்தத்தால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், நிதானம் இழந்து பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

குழந்தையைக் கொன்ற பிறகு தனது கணவருக்குத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்ட அந்தப் பெண், “உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி, எனக்கு ஒரு நல்ல செய்தி; நான் குழந்தையைக் கொன்றுவிட்டேன்” என்று எவ்வித பதற்றமுமின்றித் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், குழந்தையைக் கொன்ற அந்தப் பெண்ணைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.