மகாராஷ்டிரா மாநிலம் காத்கோபார் கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய 10ஆம் வகுப்பு மாணவியை, அவரது தாயே பணம் சம்பாதிக்கும் ஆசையில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாணவியின் தாய், தனது ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து மாணவியைக் கட்டாயப்படுத்தி இந்த விபச்சாரத் தொழிலுக்குத் தள்ளியுள்ளார்.
மாணவி மறுப்பு தெரிவித்தபோதும், அவரது தாய் அடித்துத் துன்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு இது குறித்து அவரது ஆசிரியையிடம் கூறி உதவி கோரவே, ஆசிரியை தொண்டு நிறுவன உதவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் மூன்று பேரிடம் பணம் வாங்கியது தெரியவந்தது. தற்போது மாணவி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
மாணவியின் தாயும் அவருக்கு உடந்தையாக இருந்தவரும் தலைமறைவாக உள்ளனர் என்றும், அவர்களைத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், பலாத்காரம் செய்த நபர்கள் மீதும், தாயார் மற்றும் உடன் இருந்தவர் மீதும் போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (LIC HFL) நிறுவனத்தில் 180 இளநிலை உதவியாளர் (Junior Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு…
இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும் பயணிகளின் 'வெயிட்டிங் லிஸ்ட்' டென்ஷனைக் குறைக்க, முன்பதிவுப் பட்டியல் (Chart) தயாரிக்கும் முறையில் புதிய…
ஆதாரில் பயோமெட்ரிக் தகவல்களை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ள செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 5…
இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள 11 இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு…
சமையலறையில் தொல்லை தரும் ஈக்கள், எறும்புகள் மற்றும் கரப்பான் பூச்சிகளை விரட்ட வெங்காயம் மற்றும் பேக்கிங் சோடா கலந்த எளிய…
கோடை காலத்தின் உஷ்ணத்தைத் தணிக்கும் இயற்கை வரப்பிரசாதமான தர்பூசணி, வெறும் தாகம் தீர்க்கும் பழம் மட்டுமல்லாமல் பல மருத்துவ குணங்களையும்…