“குழந்தைய நானே கொன்னுட்டேன்”…. மனைவியின் போன் காலைக் கேட்டு அதிர்ந்துபோன கணவர்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

By Nanthini on ஆடி 28, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் சௌலி கிராமத்தைச் சேர்ந்த மருந்துக் கடை உரிமையாளர் கிருஷ்ண முராரி குப்தா என்பவரின் மனைவி ரூச்சி ஜிண்டால், தனது மைத்துனரான கோவிந்த் குப்தாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்துவந்துள்ளார். கடந்த ஜூன் 28-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வந்த இவர்களது 3 வயது மகன், தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளான். அந்த சமயத்தில் காதலன் கோவிந்துடன் போனில் பேசிக்கொண்டிருந்த ரூச்சி, குழந்தையின் அழுகையால் ஆத்திரமடைந்து அவனது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். பின்னர் கணவருக்கு பயந்து, உடல்நலக்குறைவால் குழந்தை உயிரிழந்துவிட்டதாக நாடகமாடி, போலியோ சொட்டு மருந்தின் பக்கவிளைவால் தான் உயிரிழந்தான் என குடும்பத்தினரை நம்பவைத்து உடலையும் அடக்கம் செய்துள்ளனர்.

சம்பவம் நடந்து ஒரு மாதம் கழித்து, ரூச்சி மீண்டும் கோவிந்துடன் தொலைபேசியில் உரையாடியபோது, “குழந்தையை நானேதான் கொன்றேன்” என்று கூறியதை மறைந்திருந்து கேட்ட கணவர் கிருஷ்ண முராரி பேரதிர்ச்சி அடைந்தார். மனைவியின் கொடூர முகம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, அவர் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகாரளித்தார். காதலனுடன் பேச இடையூறாக இருந்த பெற்ற மகனையே தாய் படுகொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

இப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மஹாவன் துணைக்காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் ராய் கூறுகையில், உண்மையைக் கண்டறிய குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தாய் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.