அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள டெரிடர் (DeRidder) நகரத்தின் முன்னாள் பெண் மேயர், தான் பதவியில் இருந்தபோது தனது வீட்டில் நடைபெற்ற மது விருந்தின் போது, தனது மகனின் 16 வயது நண்பனுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். 43 வயதான மிஸ்டி ராபர்ட்ஸ் (Misty Roberts) என்ற அந்த முன்னாள் மேயர், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் தனது பதவியை ராஜினாமா செய்த சில நாட்களிலேயே இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின் போது, அந்த மது விருந்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் சாட்சியங்கள் நடுவர் குழுவினருக்கு (Jury) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. ராபர்ட்ஸின் இரண்டு பிள்ளைகளும் அவரது மருமகனும் சாட்சியமளித்தபோது, அன்று இரவு மேயரும் அந்த 16 வயது சிறுவனும் ஒன்றாக இருந்ததைக் கண்டதாகத் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் ஒளிபரப்பப்பட்ட நேர்காணல் பதிவுகளில், முன்னாள் மேயரின் சொந்த மகனே, ஜன்னலின் இடுக்கின் வழியாகத் தன் தாய் தனது நண்பனுடன் உடலுறவு கொள்வதைக் கண்டதாகப் புலனாய்வாளர்களிடம் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவரது மகள் நீச்சல் குளத்தின் நீர் பிம்பத்தின் வழியாக இதனைப் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணையின் போது, ராபர்ட்ஸின் மருமகன் சாட்சி கூண்டில் ஏறி, அன்று இரவு அறையில் நடந்ததை மறைந்து நின்று தனது கைபேசி கேமரா மூலம் படம்பிடித்ததாக அதிரடி சாட்சியமளித்தார். ஆனால், அந்த வீடியோவை தான் யாருக்கும் அனுப்பவில்லை என்றும், பின்னர் தனது ஸ்னாப்சாட் (Snapchat) நினைவகத்திலிருந்து அதை நீக்கிவிட்டதாகவும், ஆதாரங்களை அழிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் அவர் கூறினார். மேலும், அந்த விருந்து முடிந்த சில நாட்களில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய், முன்னாள் மேயர் ராபர்ட்ஸைத் தொடர்புகொண்டு அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்று குறுஞ்செய்தி மூலம் கேட்டுள்ளார். அதற்குத் தான் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதாக ராபர்ட்ஸ் பதிலளித்த ஸ்கிரீன்ஷாட்டுகளும் நீதிமன்றத்தில் ஆதாரங்களாகக் காட்டப்பட்டன.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, ராபர்ட்ஸின் வீட்டிற்கு ‘டோர் டேஷ்’ (DoorDash) உணவு விநியோக செயலி ஓட்டுநர் ஒருவர் அவசரக்கால கருத்தடை மாத்திரையை (Emergency Contraceptive Pill) டெலிவரி செய்ததாக நீதிமன்றத்தில் நேரில் சாட்சியமளித்தார். அனைத்துத் தரப்பு சாட்சியங்கள் மற்றும் வலுவான டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில், மிஸ்டி ராபர்ட்ஸ் மீதான சிறாருடன் தகாத முறையில் நடந்துகொண்டது மற்றும் சிறாருடன் பாலியல் உறவு கொண்டது ஆகிய இரண்டு கடுமையான குற்றச்சாட்டுகளும் நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதன் காரணமாக, அவர் 10 ஆண்டுகள் மற்றும் 7 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊழல் புகாரில் சிக்கியுள்ள திமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேரை விரைவில் கைது செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை அதிகாரிகள் நிற்க வைக்கக் கூடாது எனப் பதிவுத்துறை அதிரடி…
சென்னையை அடுத்த சித்தலாம்பாக்கம் ஜெயாநகர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுரேஷ் - சரண்யா தம்பதியரின் மூத்த மகனான கணேஷ்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைத்த ஒரே வாரத்திற்குள், புதிய அரசு பல்வேறு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில், பிற முன்னணி கட்சிகளிலிருந்து அடுத்தடுத்து பலரும்…
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் புதிய 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம், கடந்த மே 10-ஆம்…