“ஐயோ, என் பொண்ணே போயிட்டா இனி இந்த உசுரு எனக்கு எதுக்கு”… மகள் இறந்த துக்கத்தில் தாய் எடுத்த விபரீத முடிவு… நெஞ்சை உலுக்கும் சோகம்….!

Spread the love

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் பகுதியை சேர்ந்த சுடலை முத்து என்பவர் உடைய மனைவி அமுதவல்லி (55). இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ள நிலையில் மகளுக்கு திருமணமாகிவிட்டது. இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுடலை முத்து உயிரிழந்து விட்டார். பிறகு கடந்த ஆண்டு அமுதவல்லியின் மகளும் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இதனால் அமுதவல்லி மனமுடைந்த நிலையில் அதே நினைவில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் அமுதவல்லி தன்னுடைய வீட்டில் திடீரென்று உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இதில் உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலேயே துளி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அமுதவல்லியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மகள் உயிரிழந்த துக்கத்தில் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ஐயோ… பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த… இளம்பெண்ணை ரயிலில் தள்ளிவிட்டு கொல்ல முயற்சி… மும்பையை உலுக்கிய கொடூரம்…!

மும்பை புறநகர் மின்சார ரயிலில் 20 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில்…

2 minutes ago

அதிர்ச்சி… அடர்ந்த காட்டில் 6 நாட்கள் மாயமான 17 வயது சிறுவன்… ஹெலிகாப்டர் கேமராவில் சிக்கி மீட்கப்பட்ட திக் திக் நிமிடங்கள்…!!

நவம்பர் 6 அன்று, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள வல்ஹல்லா அருகே உள்ள காட்டில், தனது சகோதரருடன் முகாம் இட்டிருந்த…

16 minutes ago

வேலையை விடுங்க… நீங்க முதலாளி ஆகுங்க… தோத்துட்டா திரும்ப இங்கே வாங்க… ஊழியர்களை அதிர வைத்த… பெங்களூரு நிறுவனத்தின் மெகா ஆஃபர்…!

பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஃபிரெஷ் ஃபுட் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா பி.சி., தனது ஊழியர்கள் சொந்தமாகத்…

25 minutes ago

ஐயோ… குழந்தையை என்கிட்ட கொடுங்க… நடுவானில் விமானப் பணியாளர் செய்த காரியம்… அதிர்ச்சியில் பயணிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

அகாசா ஏர் விமானத்தில் பயணித்த கைக்குழந்தையை, நிஷாந்த் என்ற விமானப் பணிப்பெண்/பணியாளர் தனது கைகளில் ஏந்தி நடந்து சென்று சமாதானப்படுத்திய…

33 minutes ago

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

12 மணத்தியாலங்கள் ago