“ஐயோ, என் பொண்ணே போயிட்டா இனி இந்த உசுரு எனக்கு எதுக்கு”… மகள் இறந்த துக்கத்தில் தாய் எடுத்த விபரீத முடிவு… நெஞ்சை உலுக்கும் சோகம்….!

By Nanthini on கார்த்திகை 11, 2025

Spread the love

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் பகுதியை சேர்ந்த சுடலை முத்து என்பவர் உடைய மனைவி அமுதவல்லி (55). இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ள நிலையில் மகளுக்கு திருமணமாகிவிட்டது. இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுடலை முத்து உயிரிழந்து விட்டார். பிறகு கடந்த ஆண்டு அமுதவல்லியின் மகளும் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இதனால் அமுதவல்லி மனமுடைந்த நிலையில் அதே நினைவில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் அமுதவல்லி தன்னுடைய வீட்டில் திடீரென்று உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இதில் உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலேயே துளி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அமுதவல்லியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மகள் உயிரிழந்த துக்கத்தில் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.