தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக உள்ளது. அதாவது திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. இதில் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக எப்படியும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் சீமான் யாருடனும் கூட்டணி வைக்காமல் தன்னந்தனி ஆளாக கட்சியை வழிநடத்தி வருகிறார். அதேசமயம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் அதிமுக ஆட்சியை நிலை நாட்டுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார்.
இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கி உள்ளதால் விஜயை தங்கள் கூட்டணியில் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. விஜய்க்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் நடந்த பொது குழு கூட்டத்தில் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் கூட்டணி இல்லை என்பதை ஏறத்தாழ உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் 2026 தேர்தலில் தமிழக வெற்றிக்கலகம் தலைமையில் கூட்டணி என முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், சாதக பாதகங்களை ஆராய சிறப்பு சர்வே ஒன்றை நடத்த விஜய் முடிவெடுத்துள்ளார். இதில் தமிழக வெற்றிக்கலகம் கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை சேர்த்தால் பலம், அதேநேரம் நாம் யாருடன் கூட்டணி சேர்ந்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பன உள்ளிட்ட பல கேள்விகள் இடம்பெற உள்ளதாக தெரிகிறது. இந்த ரிசல்ட் வந்தவுடன் விஜய் அடுத்த கட்ட முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…