மும்பையை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் அதிர்ச்சி புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் சிறுமியின் தாய் மற்றும் பக்கத்து வீட்டு நபர் என இரண்டு பேரும் சேர்ந்து தன்னை பணம் சம்பாதிப்பதற்காக விபச்சார தொழில் தள்ளியதாக கூறி அழுதுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் முதலே இந்த கொடுமை அந்த சிறுமிக்கு நடந்தது. இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு ஓடியா சிறுமி தோழியோடு அவர் வீட்டில் மூன்று நாட்கள் தங்கி உள்ளார்.
அதன் பிறகு சிறுமி வீட்டிற்கு திரும்பிய போது அடி உதை விழுந்துள்ளது. இதனால் மீண்டும் சிறுமி பாலியல் தொழிலுக்கு தள்ளியுள்ளார்கள். இது குறித்து சிறுமி தன்னுடைய தோழியிடமும் கூறியுள்ளார். பின்னர் தைரியத்தோடு பள்ளி ஆசிரியர்களிடம் அந்த சிறுமி தன்னுடைய கொடுமைகளை கூறியுள்ளார். பள்ளி நிர்வாகத்திடம் கூறி போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் வயது, குற்றச்சாட்டுகளை தீவிரமாக கருத்தில் கொண்டு போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளார்கள்.
