“வாய் கவசம் இல்லாமல் உலா வந்த பிட்புல்….” வளர்ப்பு நாயால் விரலை இழந்த 5 குழந்தைகளின் தாய்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 28, 2026

Spread the love

துருக்கியின் இஸ்மீர் நகரில் உள்ள கர்சியாகா மாவட்டத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஐந்து குழந்தைகளின் தாயான ஆயிஷா ஓர்டான் என்பவர், தனது சிறிய ரக நாயுடன் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் வாய் கவசம் மற்றும் கழுத்துப்பட்டி இல்லாமல் அவிழ்த்து விடப்பட்டிருந்த பிட்புல் ரக நாய் ஒன்று, ஆயிஷாவை திடீரென கொடூரமாக தாக்கியுள்ளது. இந்த கொடூரத் தாக்குதலில் அவரது வலது ஆள்காட்டி விரல் துண்டிக்கப்பட்டு கடுமையாக சிதைந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குச் சிதைந்த விரலை மீண்டும் பொருத்த முடியாமல் போனது.

“அங்கிருந்தவர்கள் காப்பாற்றவில்லை என்றால் நான் உயிருடன் இருந்திருக்க முடியாது. எனது வேலையையும் இழந்துவிட்டேன். அந்த நாய் இன்னும் சுற்றிக் கொண்டிருப்பதால் வெளியே வரக்கூட பயமாக உள்ளது. இதுபோன்ற வாய் கவசம் இல்லாமல் நாய்களை அழைத்து வருபவர்கள் மீது அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.