பொது இடங்களில் நாகரிகமற்ற முறையில் நடந்துகொள்வது மற்றும் குழந்தைகளின் வளர்ப்பு முறை குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. ஒரு தாய் தனது சிறுவனைத் தேங்காய்த் தொட்டியில் சிறுநீர் கழிக்க வைத்து, பின்னர் அதைச் சாலையிலேயே கொட்டியது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ये है हमारा सिविक सेंस…
एक महिला ने नारियल को “चलते-फिरते टॉयलेट” के रूप में इस्तेमाल करके सही जगह न फेंकने के बजाय सड़क पर ही फेंक दिया गया।और हैरानी की बात ये है कि,
इस पूरी घटना का वीडियो बनाकर सोशल मीडिया पर साझा भी किया गया, मानो यह उनके लिए एक सामान्य बात हो।आखिर इस… pic.twitter.com/xbFZG57pY4
— NCIB Headquarters (@NCIBHQ) March 23, 2026
இந்தக் காட்சியை அந்தச் சிறுவனின் தந்தையே வீடியோவாகப் பதிவு செய்திருப்பது கூடுதல் அதிர்ச்சியைத் தருகிறது. தூய்மை மற்றும் பொது ஒழுக்கம் குறித்த விழிப்புணர்வு பெருகி வரும் இவ்வேளையில், பெற்றோரின் இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் சமூகத்தின் மீதான அக்கறையின்மையையே காட்டுகின்றன எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
