இந்தியாவுக்குத் தேவையான சமையல் எரிவாயுவை (LPG) ஏற்றிக்கொண்டு ‘பைன் கேஸ்’ மற்றும் ‘ஜக் வசந்த்’ ஆகிய இரண்டு பிரம்மாண்டக் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடந்துள்ளன. சுமார் 92,000 டன் எடையுள்ள எல்.பி.ஜி-யுடன் வரும் இந்தக் கப்பல்கள், அடுத்த நான்கு நாட்களுக்குள் இந்தியாவை வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தை சீராக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஷிவாலிக், நந்தா தேவி மற்றும் ஜக் லட்சுமி ஆகிய கப்பல்கள் இந்தியாவை வந்தடைந்துள்ள நிலையில், தற்போது வரும் புதிய சரக்குகளால் வீட்டு சிலிண்டர் தட்டுப்பாடு கணிசமாகக் குறையும் என அரசு கருதுகிறது. இந்த வரவு பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளிப்பதோடு, எரிவாயு விநியோகச் சங்கிலியை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
